20-ம் தேதி நம்பிக்கையுடன் இருக்கிறேன் - நிர்பயா தாயார் பேட்டி
20-ம் தேதி நம்பிக்கையுடன் இருக்கிறேன் என நிர்பயாவின் தாயார் ஆஷா தேவி கூறியுள்ளார்.
புதுடெல்லி,
நிர்பயா வழக்கு குற்றவாளிகள் முகேஷ்குமார் சிங், பவன்குப்தா, வினய்குமார் சர்மா, அக்ஷய்குமார் சிங் ஆகிய 4 பேருக்கும் வரும் 20ந்தேதி காலை 5.30 மணியளவில் தூக்கு தண்டனை நிறைவேற்ற டெல்லி நீதிமன்றம் புதிய மரண வாரண்ட் உத்தரவை பிறப்பித்து உள்ளது.
இந்நிலையில் இது குறித்து நிர்பயாவின் தாயார் ஆஷா தேவி செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
நான்கு குற்றவாளிகள் அனைத்து சட்ட தீர்வுகளையும் கண்டுவிட்டனர். நீதீமன்றம் உத்தரவிட்ட தேதியில் குற்றவாளிகள் தூக்கிலிடப்படும் இறுதி தேதியாக மார்ச் 20 இருக்கும் என நான் நம்புகிறேன் என தெரிவித்தார்.
Related Tags :
Next Story