குப்வாராவில் பாகிஸ்தான் ராணுவ நிலைகள் மீது இந்தியா அதிரடி தாக்குதல்


குப்வாராவில் பாகிஸ்தான் ராணுவ நிலைகள் மீது இந்தியா அதிரடி தாக்குதல்
x
தினத்தந்தி 5 March 2020 8:04 PM IST (Updated: 5 March 2020 8:04 PM IST)
t-max-icont-min-icon

தொடர்ந்து அத்துமீறி தாக்குதல் நடத்தும் பாக்.ராணுவத்திற்கு இந்தியா பதிலடி கொடுக்கும் விதமாக எல்லை பகுதியான குப்வாராவில் ஏவுகணைகளை வீசி இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியது.

ஸ்ரீநகர்,

போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி எல்லையில் அவ்வப்போது தாக்குதல் நடத்துவதை பாகிஸ்தான் ராணுவம் வாடிக்கையாக கொண்டுள்ளது. இந்திய ராணுவம் பாகிஸ்தானின் அத்துமீறிய தாக்குதலுக்கு தக்க பதிலடி கொடுத்து வரும் நிலையிலும் பாகிஸ்தான் ராணுவம் திருந்தியபாடில்லை. 

அந்த வகையில்,  எல்லை பகுதியான குப்வாராவில் பாகிஸ்தான் ராணுவ நிலைகள் மீது இந்தியா ஏவுகணைகளை வீசி அதிரடி தாக்குதல் நடத்தி உள்ளது. 

தொடர்ந்து அத்துமீறி தாக்குதல் நடத்தும் பாக். ராணுவத்திற்கு இந்தியா பதிலடி கொடுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்திய ராணுவம் நடத்திய தாக்குதலின் வீடியோ தற்போது வெளியிடப்பட்டுள்ளன.

Next Story