தமிழக மீனவர்களை மீட்க கோரிக்கை விடுத்த அ.தி.மு.க. பெண் எம்.பி.யை பாராட்டிய தி.மு.க. எம்.பி.


தமிழக மீனவர்களை மீட்க கோரிக்கை விடுத்த அ.தி.மு.க. பெண் எம்.பி.யை பாராட்டிய தி.மு.க. எம்.பி.
x
தினத்தந்தி 6 March 2020 5:14 AM IST (Updated: 6 March 2020 5:14 AM IST)
t-max-icont-min-icon

ஈரானில் கொரோனா வைரஸ் பாதிப்பால், அங்கு மீன்பிடி தொழிலுக்கு சென்ற குமரி, நெல்லையைச் சேர்ந்த 400 பேர் உள்பட 721 மீனவர்கள் ஊர் திரும்ப முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

புதுடெல்லி, 

தமிழக மீனவர்களை உடனே மீட்டுவருமாறு மத்திய அரசை தமிழக அரசு வலியுறுத்தி உள்ளது. இந்த நிலையில், இதே கோரிக்கையை அ.தி.மு.க. எம்.பி. விஜிலா சத்யானந்த் நேற்று மாநிலங்களவையில் எழுப்பினார்.

அப்போது, “மீனவர்களை ஈரானில் இருந்து விமானத்தில் அழைத்துவர முடியாத நிலை இருந்தால், கப்பல் மூலமாவது அருகில் உள்ள துறைமுகத்துக்கு அனுப்பி அங்கிருந்து ஊர் திரும்ப ஏற்பாடு செய்யவேண்டும்” என்று பேசினார்.

இதனைத் தொடர்ந்து நாடாளுமன்ற வளாகத்தில் அவரை சந்தித்த தி.மு.க. எம்.பி. டி.கே.எஸ்.இளங்கோவன் அவரோடு கைகுலுக்கி பேசினார். இதுபற்றி விஜிலா சத்யானந்த் கூறுகையில், மீனவர்களை மீட்டு வரும் கோரிக்கை பற்றி சிறப்பாக பேசியதற்காக டி.கே.எஸ்.இளங்கோவன் பாராட்டியதாக தெரிவித்தார்.

கட்சி பாகுபாடு இல்லாத இந்த பாராட்டு, நாடாளுமன்ற வளாகத்தில் நேற்று பலராலும் பேசப்பட்டது.

Next Story