ரூ.9½ கோடி வரி பாக்கிக்காக நிரவ் மோடியின் 3 சொத்துகள் முடக்கம் - மும்பை மாநகராட்சி அதிரடி நடவடிக்கை


ரூ.9½ கோடி வரி பாக்கிக்காக நிரவ் மோடியின் 3 சொத்துகள் முடக்கம் - மும்பை மாநகராட்சி அதிரடி நடவடிக்கை
x
தினத்தந்தி 6 March 2020 11:28 AM IST (Updated: 6 March 2020 11:28 AM IST)
t-max-icont-min-icon

ரூ.9½ கோடி சொத்து வரி பாக்கி வைத்துள்ளார். எனவே அந்த வரியை வசூலிக்க நிரவ் மோடியின் 3 சொத்துகளை மும்பை மாநகராட்சி அதிரடியாக முடக்கி உள்ளது.

மும்பை, 

குஜராத்தை சேர்ந்த வைர வியாபாரி நிரவ் மோடி மும்பையில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.13 ஆயிரத்து 600 கோடி கடன் வாங்கி மோசடி செய்துவிட்டு வெளிநாட்டுக்கு தப்பி ஓடினார். லண்டனில் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் அவரை இந்தியா கொண்டு வர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்தநிலையில் நிரவ் மோடி மும்பை மாநகராட்சிக்கு ரூ.9½ கோடி சொத்து வரி பாக்கி வைத்துள்ளார். எனவே அந்த வரியை வசூலிக்க நிரவ் மோடியின் 3 சொத்துகளை மாநகராட்சி அதிரடியாக முடக்கி உள்ளது.

அதன்படி அவருக்கு சொந்தமான வணிக கட்டிடம், ஒரு குடியிருப்பு கட்டிடம் உள்ளிட்ட 3 சொத்துகள் முடக்கப்பட்டு உள்ளது. இதுதொடர்பான நோட்டீசையும் அந்த கட்டிடங்களில் மாநகராட்சி ஒட்டி உள்ளது.


Next Story