பீகாரில் சாலை விபத்து ; 11 பேர் பலி, 4 பேர் படுகாயம்


பீகாரில் சாலை விபத்து  ; 11 பேர் பலி, 4 பேர் படுகாயம்
x
தினத்தந்தி 7 March 2020 8:38 AM IST (Updated: 7 March 2020 8:38 AM IST)
t-max-icont-min-icon

பீகாரில் காரும் டிராக்டரும் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் 11 பேர் பலியாகினர்.

முசாபர்பூர்,

பீகார் மாநிலம் முசாபர்பூர்  அருகே கன்ட்டி என்ற இடம் வழியாக செல்லும் தேசிய நெடுஞ்சாலையில்,  ஸ்கார்பியோ காரும் டிராக்டரும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இந்த கோர விபத்தில் 11 நிகழ்விடத்திலேயே பலியாகினர். 4 பேர் படுகாயம் அடைந்தனர். 

காயம் அடைந்தவர்கள் அருகாமையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story