காஷ்மீரில் கொரோனா வைரஸ் பாதிப்பு; ஆரம்பப் பள்ளிகளுக்கு மார்ச் 31ம் தேதி வரை விடுமுறை


காஷ்மீரில் கொரோனா வைரஸ் பாதிப்பு; ஆரம்பப் பள்ளிகளுக்கு மார்ச் 31ம் தேதி வரை விடுமுறை
x
தினத்தந்தி 7 March 2020 10:57 AM IST (Updated: 7 March 2020 10:57 AM IST)
t-max-icont-min-icon

காஷ்மீரில் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக ஜம்மு மற்றும் சம்பா மாவட்டங்களில் உள்ள ஆரம்பப் பள்ளிகளுக்கு மார்ச் 31ம் தேதி வரை விடுமுறை விடப்பட்டுள்ளது.

காஷ்மீர்,

சீனாவின் ஹுபெய் மாகாண தலைநகரான உகானில் இருந்து நாடு முழுவதும் பரவிய கொரோனா வைரஸ், தற்போது சீனாவை மட்டுமின்றி உலகம் முழுவதையும் கடுமையாக மிரட்டி வருகிறது.   குறிப்பாக தென்கொரியா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளில் கொரோனா வைரஸ் கடும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பால், பலி எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்த வண்ணமே உள்ளது.  சீனாவை தொடர்ந்து இந்தியாவிலும் கொரோனா வைரசால் டெல்லியில் 31 பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் காஷ்மீரில் 2 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஜம்மு மற்றும் சம்பா மாவட்டங்களில் உள்ள ஆரம்பப் பள்ளிகளுக்கு மார்ச் 31ம் தேதி வரை விடுமுறை விடப்பட்டுள்ளது. காஷ்மீரில் மார்ச் 31-ம் தேதி வரை பயோமெட்ரிக் வருகை பதிவிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

Next Story