உலக மகளிர் தினம் - தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் வாழ்த்து
உலக மகளிர் தினத்தை முன்னிட்டு அனைத்து பெண்களுக்கும் தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
ஐதராபாத்,
உலகின் ஆக்கும் சக்தியான பெண்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் நோக்கில் உலக மகளிர் தினம் ஆண்டு தோறும் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று உலகம் முழுவதும் மகளிர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்நிலையில் சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் வாழ்த்து செய்தி வெளியிட்டுள்ளார்.
தடைகளை தகர்த்து தவிடு பொடியாக்கி சாதனைகளாக தடம் பதிக்க அனைத்து மகளிரையும் வாழ்த்துகிறேன். அனைத்து மகளிர்களுக்கும் எனது மகளிர் தின வாழ்த்துக்கள் எனவும் தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் பதிவிட்டுள்ளார்.
தடைகளை தகர்த்து தவிடு பொடியாக்கி... சாதனைகளாக தடம் பதிக்க அனைத்து மகளிரையும் வாழ்த்துகிறேன். அனைத்து மகளிர்களுக்கும் எனது இனிய மகளிர் தின வாழ்த்துக்கள்...
— Dr Tamilisai Soundararajan (@DrTamilisaiGuv) March 7, 2020
Related Tags :
Next Story