லண்டன் செல்ல முயன்ற ராணா கபூர் மகள் தடுத்து நிறுத்தம்


லண்டன் செல்ல முயன்ற ராணா கபூர் மகள் தடுத்து நிறுத்தம்
x
தினத்தந்தி 9 March 2020 12:00 AM IST (Updated: 8 March 2020 11:13 PM IST)
t-max-icont-min-icon

லண்டன் செல்ல முயன்ற யெஸ் வங்கியின் நிறுவனர் ராணா கபூர் மகள் தடுத்து நிறுத்தப்பட்டார்.

மும்பை,

நிதி முறைகேடு தொடர்பாக யெஸ் வங்கியின் நிறுவனர் ராணா கபூரை அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று கைது செய்து விசாரித்து வரும் நிலையில், சி.பி.ஐ.யும் இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்த தொடங்கி உள்ளது.

இந்த நிலையில், ராணா கபூரின் மகள்களில் ஒருவரான ரோஷிணி கபூர் நேற்று லண்டன் செல்வதற்காக மும்பை விமான நிலையத்துக்கு வந்தார். ஆனால் அமலாக்கத்துறை அதிகாரிகள், ரோஷிணி கபூரை தடுத்து நிறுத்தினார்கள். விமானத்தில் ஏற அவரை அனுமதிக்கவில்லை. விசாரணைக்கு ஒத்துழைக்குமாறு அவரை அதிகாரிகள் கேட்டுக் கொண்டனர். ரோஷிணி கபூருக்கு எதிராக பிறப்பிக்கப்பட்டு இருந்த தேடப்படும் நபர் தொடர்பான சுற்றறிக்கையை (எல்.ஓ.சி.) தொடர்ந்து அவர் தடுத்து நிறுத்தப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

Next Story