யெஸ் வங்கி விவகாரத்தில் பாரதீய ஜனதா- காங்கிரஸ் மோதல்
யெஸ் வங்கி விவகாரத்தில் பாரதீய ஜனதா கட்சியும், காங்கிரஸ் கட்சியும் மோதிக்கொண்டுள்ளன.
புதுடெல்லி,
யெஸ் வங்கி விவகாரத்தில் பாரதீய ஜனதா கட்சியும், காங்கிரஸ் கட்சியும் மோதிக்கொண்டுள்ளன.
தனியார் வங்கியான யெஸ் வங்கி, பெரும் நிதி நெருக்கடியில் சிக்கியுள்ளது. இதையடுத்து பாரத ரிசர்வ் வங்கி அதிரடி நடவடிக்கையில் இறங்கி, அந்த வங்கியின் இயக்குனர் குழுவை முடக்கி, வங்கியை தனது நேரடி கட்டுப்பாட்டில் கொண்டு வந்தது.
இது தொடர்பான முறைகேட்டில் யெஸ் வங்கி நிறுவனர் ராணா கபூரை அமலாக்கத்துறை அதிகாரிகள் மும்பையில் நேற்று கைது செய்தனர். அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி, தங்கள் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையே ராணா கபூர் குடும்பத்தினர் செய்துள்ள ரூ.2,000 கோடி முதலீடுகள் தொடர்பாகவும், அவர்கள் வாங்கிக்குவித்துள்ள 44 விலை உயர்ந்த ஓவியங்கள் தொடர்பாகவும் ஆதாரங்கள் சிக்கியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின.
நேற்று ஒரு ஆங்கில டி.வி. சேனலில், காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தியிடம் ராணா கபூர் ஒரு விலை உயர்ந்த ஓவியத்தை வாங்கியுள்ளார் என வெளியிட்ட செய்தி ‘கிளிப்பிங்’கை பாரதீய ஜனதா கட்சியின் தகவல் தொழில்நுட்ப பிரிவு பொறுப்பாளர் அமித் மாளவியா டுவிட்டரில் பகிர்ந்து கொண்டார்.
மேலும் அதில், “இந்தியாவில் நடக்கிற ஒவ்வொரு நிதி குற்றத்துக்கும், சோனியா காந்தி குடும்பத்துக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது. சோனியா காந்திக்கு விஜய் மல்லையா (கிங் பிஷர்) விமானத்தின் மேம்படுத்திய வகுப்பு டிக்கெட்டுகளை அனுப்புவது வழக்கம். மன்மோகன் சிங்குக்கும், ப.சிதம்பரத்துக்கும் அவர் குறுந்தகவல் (பல்லூடக செய்தி சேவை) அனுப்பி வந்தார். அவர் இப்போது தலைமறைவாக உள்ளார். நிரவ் மோடியின் திருமண நகை தொகுப்புகளை ராகுல் காந்தி தொடங்கி வைத்தார். பிரியங்கா காந்தியிடம் ராணா கபூர் ஓவியங்கள் வாங்கி உள்ளார்” என பதிவிட்டுள்ளார்.
இதற்கு காங்கிரஸ் கட்சி பதிலடி கொடுத்துள்ளது. அந்த கட்சி சார்பில், அதன் செய்தி தொடர்பாளர் அபிஷேக் சிங்வி கூறியதாவது:-
இப்படி குற்றம்சாட்டுவது அரசாங்கத்தின் திசை திருப்பும் உத்தி ஆகும். பிரதமராக மோடி பதவி ஏற்ற 2014-ல் இந்த வங்கியின் கடன்கள் ரூ.55 ஆயிரத்து 633 கோடியாக இருந்தது. 2019-ம் ஆண்டு மார்ச் மாதம் அது ரூ. 2 லட்சத்து 41 ஆயிரத்து 499 கோடியாக உயர்ந்தது.
ரூபாய் நோட்டு மதிப்பிழப்பு நடவடிக்கை எடுத்த பின்னர் 2 ஆண்டுகளில் அந்த வங்கியின் கடன் ரூ.98 ஆயிரத்து 210 கோடியில் இருந்து ரூ.2 லட்சத்து 3 ஆயிரத்து 534 கோடி என இரு மடங்காக ஏன் உயர்ந்தது?
பிரதமரும், நிதி மந்திரியும் தூங்கி விட்டார்களா, அவர்களுக்கு எதுவும் தெரியாதா அல்லது அவர்கள் உடந்தையா?
பிரியங்கா காந்தி தனது தந்தை ராஜீவ் காந்தியின் எம்.எப். உசேன் ஓவியத்தை ரூ.2 கோடிக்கு ராணா கபூரிடம் விற்பனை செய்துள்ளார். இந்த தொகை காசோலையாக பெறப்பட்டுள்ளது. 2010-ம் ஆண்டு பிரியங்கா காந்தியின் வருமான வரி கணக்கு தாக்கலின்போது இது தெரிவிக்கப்பட்டுள்ளது என்று அவர் கூறினார்.
யெஸ் வங்கி விவகாரத்தில் பாரதீய ஜனதா கட்சியும், காங்கிரஸ் கட்சியும் மோதிக்கொண்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Tags :
Next Story