மத்தியப்பிரதேச அரசியலில் பரபரப்பு: அமைச்சர்கள் ராஜினாமா


மத்தியப்பிரதேச அரசியலில் பரபரப்பு: அமைச்சர்கள் ராஜினாமா
x
தினத்தந்தி 10 March 2020 12:22 AM IST (Updated: 10 March 2020 12:47 AM IST)
t-max-icont-min-icon

மத்தியப்பிரதேசத்தில் 16 அமைச்சர்கள் கூண்டோடு ராஜினாமா செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

போபால்,

மத்திய பிரதேசத்தில் முதல்-மந்திரி கமல்நாத் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது.

மத்திய பிரதேசத்தில் முதல்-மந்திரி கமல்நாத்துக்கு எதிராக காங்கிரசில் கிளர்ச்சி வெடித்துள்ளது. அவரது அமைச்சரவையில் உள்ள ஆறு அமைச்சர்கள் உட்பட 16 காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் பெங்களூருக்கு வந்துள்ளனர். எனவே காங்கிரஸ் கட்சி ஆட்சியில் நீடிக்குமா என்ற சந்தேகம் எழுந்தது. இதனால்  மத்திய பிரதேச அரசியலில் குழப்பம் ஏற்பட்டது.

மத்திய பிரதேசத்தில் கர்நாடகா பாணியில் ஆட்சியில் அமர பாஜக திட்டத்தை கையில் எடுத்திருப்பதாக தகவல்கள் வெளியாகின. அதன் ஒரு பகுதியாக பாஜகவுக்கு ஆதரவாக ஆறு அமைச்சர்கள் உள்பட காங்கிரஸ் எம்எல்ஏக்கள் 16 பேர் டெல்லியில் இருந்து மூன்று விமானங்கள் மூலம் பெங்களூரு வந்தடைந்தனர்.

இந்நிலையில் மத்தியப்பிரதேச முதல்-மந்திரி கமல்நாத் உடனான சந்திப்பில் கலந்து கொண்ட 16 அமைச்சர்களும் ராஜினாமா செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் அந்த அமைச்சர்களின் ராஜினாமாக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

மத்திய பிரதேசத்தில் ஏற்பட்டுள்ள இந்த அரசியல் குழப்பம் தொடர்பாக, காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தியுடன், ராகுல் காந்தி ஆலோசனை நடத்தினார். இந்த சூழலில் மத்தியபிரதேசத்தில் காங்கிரஸ் கட்சியின் சட்டமன்றக் கட்சி கூட்டம் இன்று மாலை நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story