60 வயதில் தோழியை கரம் பிடித்த காங்கிரஸ் மூத்த தலைவர்


60 வயதில் தோழியை கரம் பிடித்த காங்கிரஸ் மூத்த தலைவர்
x
தினத்தந்தி 10 March 2020 1:29 AM IST (Updated: 10 March 2020 1:29 AM IST)
t-max-icont-min-icon

காங்கிரஸ் மூத்த தலைவரான முகுல் வாஸ்னிக், தனது தோழியை கரம் பிடித்துள்ளார்.

புதுடெல்லி,

காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரும், அக்கட்சியின் பொதுச் செயலாளருமான முகுல் வாஸ்னிக் மராட்டிய மாநிலத்தைச் சேர்ந்தவர். அவரது தந்தை பாலகிருஷ்ணாவும் காங்கிரஸ் கட்சியில் தீவிரமாக பணியாற்றியவர்.

தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் காங்கிரஸ் நிர்வாக பொறுப்பை கவனித்துவரும் முகுல் வாஸ்னிக் தற்போது 60 வயதை கடந்துள்ளார். காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் மத்திய மந்திரியாகவும் பதவி வகித்துள்ளார்.

இந்தநிலையில் தனது நீண்டநாள் தோழியான ரவீணா குரானாவை அவர் திருமணம் செய்து கொண்டார். டெல்லியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நடந்த திருமண நிகழ்ச்சியில் ராஜஸ்தான் மாநில முதல்-மந்திரி அசோக் கெலாட், கட்சியின் மூத்த தலைவர்களான அகமது படேல், ஆனந்த் சர்மா உள்ளிட்டோர் பங்கேற்று மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.


Next Story