கர்நாடக முதியவர் பலி கொரோனா பாதிப்பா?


கர்நாடக முதியவர் பலி கொரோனா பாதிப்பா?
x
தினத்தந்தி 12 March 2020 2:38 AM IST (Updated: 12 March 2020 2:38 AM IST)
t-max-icont-min-icon

கர்நாடகாவில் முதியவர் ஒருவர் கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தாரா என்பது குறித்து தகவல் வெளியானது.

ஐதராபாத்,

கொரோனா வைரஸ் அறிகுறியுடன் ஐதராபாத் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கர்நாடக மாநிலம் கலபுரகியை சேர்ந்த முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இதனால் அவர் கொரோனா வைரஸ் பாதிப்பில் இறந்ததாக கர்நாடகம் முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

அவர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு இறந்ததாக வெளியான தகவலை கர்நாடக அரசு மறுத்ததுடன், விளக்கம் அளித்து உள்ளது. இதுதொடர்பாக கர்நாடக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

‘கொரோனா வைரஸ் அறிகுறியுடன் சிகிச்சை பெற்று வந்த கலபுரகியை சேர்ந்த 76 வயது முதியவர் மரணம் அடைந்துள்ளார். அவரது உடல் அடக்கம் செய்யும் பணிகள் முடிவடையும் வரை கண்காணிக்க சுகாதாரத்துறை அதிகாரிகள் 2 பேர் நியமிக்கப்பட்டு உள்ளனர். கொரோனா வைரஸ் பாதிப்பால் அவர் உயிரிழந்தாரா என்பது, ஆய்வறிக்கை வந்த பிறகே தெரியவரும்.’

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

இந்த நிலையில், கொரோனா வைரஸ் அறிகுறியுடன் இறந்தவரின் பெயரை விதிகளை மீறி வெளியிட்டது ஏன்? என்பது பற்றி விளக்கம் அளிக்கும்படி கலபுரகி சுகாதார துறைக்கு அதிகாரிகளுக்கு, மாநில அரசு நோட்டீஸ் அனுப்பி உள்ளது.


Next Story