அருணாசல பிரதேசம், ஜம்மு -காஷ்மீர், லடாக் ஆகியவை இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதிகள் ; மத்திய அரசு உறுதி


அருணாசல பிரதேசம், ஜம்மு -காஷ்மீர், லடாக் ஆகியவை இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதிகள் ; மத்திய அரசு உறுதி
x
தினத்தந்தி 12 March 2020 7:14 AM IST (Updated: 12 March 2020 7:14 AM IST)
t-max-icont-min-icon

அருணாசல பிரதேசம், ஜம்மு -காஷ்மீர், லடாக் பகுதிகள் இந்தியாவுடன் ஒருங்கிணைந்த பகுதிகள் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

புதுடெல்லி,

அருணாசல பிரதேசம், ஜம்மு காஷ்மீர், லடாக் ஆகியவை அனைத்தும் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதிகள் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. மக்களவையில் இது தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த வெளியுறவுத்துறை இணை மந்திரி வி முரளிதரன்  எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் கூறப்பட்டுள்ளதாவது;- “நாட்டின் கிழக்குப்பகுதியில்  அருணாசல பிரதேச மாநிலத்திலுள்ள சுமார் 90,000 சதுர கி.மீட்டர் பரப்பளவு கொண்ட பகுதியை சீனா சொந்தம் கொண்டாடி வருகிறது. இந்திய ஆளுகைக்கு உட்பட்ட லடாக் பகுதியில் சுமார் 38 ஆயிரம் சதுர கி.மீட்டர் பரப்பளவு கொண்ட பகுதியை சீனா கையகப்படுத்தியுள்ளது. 

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள 5,8100 சதுர கி.மீட்டர் பகுதியைக் கடந்த 1963-ஆம் ஆண்டு மார்ச் 2 ஆம் தேதி சீனாவுக்கு சட்ட விரோதமாக பாகிஸ்தான் வழங்கியது. அப்பகுதி இந்தியாவுக்குச் சொந்தமானது. அருணாசல பிரதேசம், ஜம்மு காஷ்மீர், லடாக் யூனியன் பிரதேசங்கள் முழுவதும் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதிகள் என்பதில் மத்திய அரசு உறுதியாக உள்ளது. இத்தகவல் பல்வேறு தருணங்களில் சீன அரசிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story