ஆந்திராவைச் சேர்ந்த ஒருவருக்கு கொரோனா தொற்று
இத்தாலியிலிருந்து இந்தியா வந்த ஆந்திராவைச் சேர்ந்த ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
ஐதராபாத்,
சீனாவில் உருவான கொரோனா வைரஸ் தாக்குதல் உலகம் முழுவதும் பரவி உள்ளது. இந்தியாவில் 73 பேருக்கு இந்த வைரஸ் தாக்குதல் உறுதியாகி உள்ளது. மத்திய, மாநில அரசுகள் கொரோனா வைரஸ் தாக்குதலை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன.
இந்தநிலையில் இத்தாலியிலிருந்து இந்தியா வந்த ஆந்திராவைச் சேர்ந்த ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. வறட்டு இருமல் மற்றும் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நபர் நெல்லூரில் உள்ள அரசு மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்ட சிறப்பு வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
அவருடன் தொடர்பு கொண்ட மற்ற ஐந்து நபர்கள் அடையாளம் காணப்பட்டு, வழிகாட்டுதல்படி மருத்துவமனையில் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
இதன் மூலம் இந்தியாவில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 74 ஆக உயர்ந்துள்ளது.
Related Tags :
Next Story