என்.பி.ஆர். குறித்து யாரும் அச்சப்படத் தேவையில்லை - அமித்ஷா


என்.பி.ஆர். குறித்து யாரும் அச்சப்படத் தேவையில்லை - அமித்ஷா
x

என்.பி.ஆர்.குறித்து யாரும் அச்சப்படத் தேவையில்லை என மாநிலங்களவையில், டெல்லி கலவரம் தொடர்பான விவாதத்தில் அமித்ஷா தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

குடியுரிமை திருத்த சட்டம் (சிஏஏ), மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு (என்பிஆர்) ஆகியவற்றுக்கு எதிராக இந்தியாவின் பல்வேறு இடங்களில் கடந்த டிசம்பர் மாதம் முதல் போராட்டங்கள் நடந்து வருகிறது.

இந்நிலையில் மாநிலங்களவையில் காங்கிரஸ் மூத்த எம்பி கபில் சிபல் (சிஏஏ), (என்பிஆர்)  உடன் இணைந்தால் என்ன ஆகும் என என்பிஆர் குறித்து கேள்வி எழுப்பினார். 

இதற்கு பதில் அளித்து மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா பேசியதாவது:- 

மக்கள் தொகை கணக்கெடுப்பின் போது, யாரையும் சந்தேகப்படும் நபர் என குறிப்பிடமாட்டோம். என்.பி.ஆர். குறித்து யாரும் அச்சப்படத் தேவையில்லை.  எந்த ஆவணமும் கேட்க மாட்டோம் - விருப்பம் இருந்தால் சில தகவல்களை தரலாம்.  

சிஏஏ குறித்து சிறுபான்மை சகோதர சகோதரிகள் மத்தியில் தவறான பிரச்சாரம் செய்யப்பட்டு வருகிறது. என்பதை அவர்களிடம் நான் சொல்ல விரும்புகிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story