கொரோனா அச்சம்: காலவரம்பின்றி பள்ளிகள்,கல்லூரிகள் மூடப்படுவதாக மத்திய பிரதேச அரசு அறிவிப்பு


கொரோனா அச்சம்: காலவரம்பின்றி பள்ளிகள்,கல்லூரிகள் மூடப்படுவதாக மத்திய பிரதேச அரசு அறிவிப்பு
x
தினத்தந்தி 13 March 2020 10:28 AM GMT (Updated: 13 March 2020 10:28 AM GMT)

கொரோனா அச்சம் காரணமாக மத்திய பிரதேச மாநிலத்தில் காலவரம்பின்றி பள்ளிகள், கல்லூரிகள் மூடப்படுவதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது.

போபால்,

உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் மிகப்பெரிய தொற்று நோய் என்று உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது. இந்தியாவில் 76 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் மத்தியப் பிரதேசத்தில் இதுவரை ஒருவர் கூட கொரோனா வைரஸ் பாதிப்பிற்கு ஆளாகவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில் கொரோனா அச்சம் காரணமாக மத்திய பிரதேச மாநிலத்தில் காலவரம்பின்றி பள்ளிகள், கல்லூரிகள் மூடப்படுவதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது. மேலும்  மக்கள் பொது இடங்களில் கூட்டமாக கூடுவதை தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கொரோனா அச்சம் காரணமாக கேரளா, ஒடிசா, கர்நாடகா, டெல்லி, ஜம்மு காஷ்மீரில் திரையரங்குகள் கூட மூட உத்தரவிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Next Story