இந்தியாவில் கொரோனாவின் வீரியம் நாளுக்கு நாள் அதிகரிப்பு..!


இந்தியாவில் கொரோனாவின் வீரியம் நாளுக்கு நாள் அதிகரிப்பு..!
x
தினத்தந்தி 1 April 2020 9:14 AM IST (Updated: 1 April 2020 1:08 PM IST)
t-max-icont-min-icon

இந்தியாவில் கொரோனாவின் வீரியம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

மும்பை

உலக அளவில் கொரோனா வைரசுக்கு நாள்தோறும் நூற்றுக்கணக்கானோர் பலியாகி வருகிறார்கள். அந்த வகையில் நேற்று ஒரே நாளில் சுமார் 4,000 பேர் பலியாகினர். இதில், இத்தாலி, ஸ்பெயின் ஆகிய நாடுகளில் பலியானவர்கள் மட்டும் பாதிக்கும் மேற்பட்டோர் ஆவர்.

இந்தியாவில் உறுதிப்படுத்தப்பட்ட வழக்குகள் 1,397 ஆகவும், பதிவான இறப்புகளின் எண்ணிக்கை 35 ஆகவும் இருப்பதாக மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது.

இன்று இந்தியாவில் கொரோனா வைரஸால்  பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஆயிரத்து 500-ஆக உயர்ந்துள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இந்தியாவில் வெளிநாட்டினர் வருகை, டெல்லி நிஜாமுதீன் கூட்டம் ஆகிய இரண்டு முக்கிய காரணிகளால் கொரோனாவின் வீரியம் அதிகரித்துள்ளது. நேற்று ஒரே நாளில் 216 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், இதுவரை பாதித்தோரின் எண்ணிக்கை ஆயிரத்து 447ஆக உயர்ந்துள்ளது.

மராட்டியமாநிலத்தில் இருந்து அதிக எண்ணிக்கையிலான பாதிப்புகள் பதிவாகியுள்ளன, அங்கு எண்ணிக்கை 82 அதிகரித்து செவ்வாயன்று 302 ஐ எட்டியுள்ளது. புதிய பாதிப்புகளில் 59  மும்பையிலிருந்து பதிவு செய்யப்பட்டுள்ளன. சோதனை  எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் நோயாளிகளின் எண்ணிக்கையில் திடீர் உயர்வு ஏற்பட்டதாக முதல்வர் உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார்.


கேரளா செவ்வாய்க்கிழமை அதன் இரண்டாவது கொரோனா வைரஸ் மரணத்தை பதிவு செய்து உள்ளது.  ஏழு புதிய கொரோனா வைரஸ் பாதிப்புகள் பதிவாகியுள்ளது. செவ்வாய்க்கிழமை நான்கு பேர் குணப்படுத்தப்பட்டதாக அறிவிக்கப்பட்டு உள்ளது, 215 கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் மாநிலம் முழுவதும் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தமிழ்நாட்டில் 124 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது.


Next Story