கொரோனா தடுப்பு நடவடிக்கைகள்; அனைத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை


கொரோனா தடுப்பு நடவடிக்கைகள்; அனைத்து மாநில முதல்வர்களுடன்  பிரதமர் மோடி ஆலோசனை
x
தினத்தந்தி 2 April 2020 11:47 AM IST (Updated: 2 April 2020 11:47 AM IST)
t-max-icont-min-icon

கொரோனா பாதிப்புகள் தொடர்பாக அனைத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார்.

புதுடெல்லி,

இந்தியாவில் கொரோனா வைரசின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமே உள்ளது. கொரோனா வைரசைக் கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.  கொரோனா தொற்று பரவிவிடாதபடி நாடெங்கும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.  

இந்த நிலையில்,  கொரோனா பாதிப்புகள் தொடர்பாக அனைத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி இன்று ஆலோசனை நடத்தினார். இன்று காலை 11 மணியளவில் ஆலோசனை நடைபெற்றது. காணொலி காட்சி வாயிலாக நடைபெற்ற இந்த ஆலோசனைக்கூட்டத்தில் சென்னை தலைமைச்செயலகத்தில் இருந்தபடி தமிழக முதல்வர் எடப்பாடி கே பழனிசாமி பங்கேற்றார்.

கொரோனாவால் பாதிக்கப்பட்டோருக்கான மருத்துவ வசதிகள் அதிகரிப்பு உள்ளிட்டவை பற்றி ஆலோசனை நடத்தப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் உள்துறை அமைச்சர் அமித்ஷா, சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் ஆகியோர்  கலந்து கொண்டனர். 


Next Story