நிஜாமுதீன் கூட்டத்தில் பங்கேற்ற 275 வெளிநாட்டினரை கண்டறிந்து போலீசார் தனிமைப்படுத்தினர்


நிஜாமுதீன் கூட்டத்தில் பங்கேற்ற 275 வெளிநாட்டினரை கண்டறிந்து போலீசார் தனிமைப்படுத்தினர்
x
தினத்தந்தி 2 April 2020 12:48 PM IST (Updated: 2 April 2020 12:48 PM IST)
t-max-icont-min-icon

டெல்லி நிஜாமுதீன் கூட்டத்தில் பங்கேற்ற 275 வெளிநாட்டினரை கண்டறிந்து போலீசார் அவர்களை தனிமைப்படுத்தினர்.

புதுடெல்லி

உலகம் முழுவதும் இதுவரை 9 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 46 ஆயிரத்து 837 பேர் உயிரிழந்துள்ளனர். வைரஸ் பரவியவர்களில் ஒரு லட்சத்து 93 ஆயிரத்து 891 பேர் குணமடைந்து சிகிச்சைக்கு பின் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.   உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. 

அதேபோல், இந்தியாவிலும் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்தியாவில் கொரோனா பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1834-ல் இருந்து 1965 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்பால் உயிரிழந்தோரின் எண்ணிக்கையும் 41-ல் இருந்து 50 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கையும் 144-ல் இருந்து 151 ஆக உயர்ந்துள்ளது. மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளது.

அரசாங்கத்தின் கூற்றுப்படி, மார்ச் 14 ஆம் தேதி நடந்த டெல்லி நிஜாமுதீன் கூட்டம்  காரணமாக கொரோனா வைரஸ் பாதிப்புகளின் எண்ணிக்கை பெருமளவில் அதிகரித்துள்ளது. எனவே தொழில்நுட்ப ரீதியாக இது ஒரு தேசிய போக்கைக் காட்டவில்லை. ஊரடங்கு காலத்தில் வழிகாட்டுதல்களைப் பின்பற்றவும், மதக் கூட்டங்கள் உள்ளிட்ட சபைகளைத் தவிர்க்கவும் அரசாங்கம் மக்களை வலியுறுத்தியுள்ளது ஆனால் அதை கடைபிடிக்காததால் மராட்டியம், தமிழ்நாடு மற்றும் டெல்லி ஆகியவை ஏராளமான புதிய பாதிப்புகளை உறுதிபடுத்தி உள்ளன.

டெல்லியில், நிஜாமுதீன் கூட்டத்தில் கலந்து கொண்ட 53 பேர் உள்பட கொரோனா வைரஸ் பாதிப்புகள் 152 ஆக உயர்ந்துள்ளதாகவும், மராட்டியத்தில்  புதன்கிழமை 33 முதல் 335 ஆக அதிகரித்துள்ளதாகவும், மும்பையில் மட்டும் 30 பாதிப்புகள் உள்ளன என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர். ஏறக்குறைய 5,000 தனிமைப்படுத்தப்பட்ட நபர்கள் அதிக ஆபத்து நிறைந்த பிரிவில் இருப்பதால் இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என்று மாநில அரசு தெரிவித்துள்ளது. 

டெல்லி நிஜாமுஹீன் தப்லிகி ஜமாத்தின் தலைவர் மவுலானா சாத் வியாழக்கிழமை (ஏப்ரல் 2) மருத்துவர்களின் ஆலோசனையைத் தொடர்ந்து அவர் தனிமையில் இருப்பதாகக் கூறி ஆடியோ ஒன்றை வெளியிட்டார். 

அதில் தப்லிகி ஜமாத்தின் தலைவர் மவுலானா சாத், அரசாங்க உத்தரவுகளைப் பின்பற்றுமாறு தனது பின்தொடர்பவர்களைக் கேட்டு உள்ளார்

டெல்லி நிஜாமுதீன்  கூட்டத்தில் பங்கேற்ற 275 வெளிநாட்டினரை போலீசார் இன்று அதிடியாக கைது செய்தனர்.

பிடிபட்டவர்களில் இந்தோனேசியாவை சேர்ந்த 172 பேர், கஜகஸ்தானை சேர்ந்த 36 பேர், வங்காளதேசத்தை சேர்ந்த 21பேர் என தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் அனைவரும் தனிமைப்படுத்துதல் முகாமிற்கு அழைத்துச் செல்லப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர். 

Next Story