21 நாள் ஊரடங்கு முடிவடையும் போது கொரோனா பாதிப்பு 10 ஆயிரத்தை தாண்டும்


படம் : ANI
x
படம் : ANI
தினத்தந்தி 2 April 2020 1:49 PM IST (Updated: 2 April 2020 1:49 PM IST)
t-max-icont-min-icon

21 நாள் ஊரடங்கு முடிவடையும் போது கொரோனா பாதிப்பு 10 ஆயிரத்தை தாண்டும் என கணிக்கப்பட்டு உள்ளது .

புதுடெல்லி

இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்தியாவில் கொரோனா பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1834-ல் இருந்து 1965 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்பால் உயிரிழந்தோரின் எண்ணிக்கையும் 41-ல் இருந்து 50 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கையும் 144-ல் இருந்து 151 ஆக உயர்ந்துள்ளது. மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளது.

அரசாங்கத்தின் கூற்றுப்படி, மார்ச் 14 ஆம் தேதி நடந்த டெல்லி நிஜாமுதீன் கூட்டம்  காரணமாக கொரோனா வைரஸ் பாதிப்புகளின் எண்ணிக்கை பெருமளவில் அதிகரித்துள்ளது.

புதிய கொரோனா வைரஸ் பாதிப்புகள் அதிகரிக்கும் இந்த வேகத்தில், 21 நாள் ஊரடங்கின்  முடிவில் நோயாளிகளின் எண்ணிக்கை 10,000 ஐத் தாண்டக்கூடும் என்று இந்துஸ்தான் டைம்ஸின் வணிக வெளியீடு மின்ட் தெரிவித்துள்ளது.

நாட்டில் கொரோனா வைரஸ் பாதிப்புகள் அதிகரிப்பு விகிதம் வரவிருக்கும் நாட்களில் அதிகரிக்குமா என்பதை கணிக்கும்.

மார்ச் 31 முதல் ஏப்ரல் 1 வரை இந்தியா 437 புதிய கொரோனா பாதிப்புகள் பதிவாகியுள்ளன. கடந்த 12 மணி நேரத்தில் நாடு முழுவதும் 131 புதிய கொரோனா வைரஸ் பாதிப்புகள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சகம் இன்று அறிவித்துள்ளது.

335 நோயாளிகளுடன், மராட்டியம்  முன்னிலை வகிக்கிறது,  தொடர்ந்து கேரளா 265 பாதிப்புகளுடனும்,தமிழ்நாடு 234 பாதிப்புகளுடனும் உள்ளன.


Next Story