கொரோனா பாதிப்பு; அமெரிக்காவில் பலி எண்ணிக்கை 6 ஆயிரத்தை தாண்டியது


கொரோனா பாதிப்பு; அமெரிக்காவில்  பலி எண்ணிக்கை 6 ஆயிரத்தை தாண்டியது
x
தினத்தந்தி 3 April 2020 7:16 AM IST (Updated: 3 April 2020 7:16 AM IST)
t-max-icont-min-icon

அமெரிக்காவில் கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 6 ஆயிரத்தை தாண்டியுள்ளது.

வாஷிங்டன்,

உலகம் முழுவதும் 204 நாடுகளில் பரவியுள்ள கொரோனா வைரஸ், வல்லரசு நாடான அமெரிக்காவில் கடும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா வைரசால் அதிகம் பாதிக்கப்பட்டவர்களை கொண்ட நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா முதலிடம் வகிக்கிறது. அமெரிக்காவில் தற்போதைய நிலவரப்படி 244,877 - பேர் கொரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். அமெரிக்காவில் கொரோனா வைரசுக்கு பலியானோர் எண்ணிக்கை 6 ஆயிரத்தை தாண்டியுள்ளது. 

அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக இத்தாலியில் கொரோனா வைரஸ் கோர தாண்டவம் ஆடி வருகிறது. இத்தாலியில்  115,242 பேர் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.  பலியானோர் எண்ணிக்கை  13,915- ஆக உயர்ந்துள்ளது. ஸ்பெயின், ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளிலும் கொரோனா வைரஸ் கடும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது.  ஸ்பெயினில் 112,065 பேர் கொரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளனர்.  10,348 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். 

Next Story