இந்தியாவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 3,374 ஆக உயர்வு
இந்தியாவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 3,374 ஆக உயர்ந்துள்ளது.
புதுடெல்லி,
உலகையே அச்சுறுத்தி வருகிற கொரோனா வைரஸ், இந்தியாவில் வேகமாக பரவ தொடங்கி இருக்கிறது. மத்திய, மாநில அரசுகள் தீவிர நடவடிக்கைகளை எடுத்து வந்த போதிலும் நோய்க்கிருமி பரவும் வேகத்தை முழுமையாக கட்டுப் படுத்த முடியவில்லை. இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வருகிறது.
இன்று காலை சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையின் படி, இந்தியாவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 3,374 ஆக உயர்ந்துள்ளது. அதேபோல், கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 75-ல் இருந்து 77 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கையும் 213-ல் இருந்து 267 ஆக உயர்ந்துள்ளது.
மாநிலங்களில் அதிகபட்சமாக மராட்டியத்தில் 490 பேருக்கு கொரோனா பாதிப்பு உள்ளது. அதற்கு அடுத்தபடியாக தமிழகத்தில் 485-பேருக்கு கொரோனா தொற்று உள்ளது.
Related Tags :
Next Story