ஊரடங்கால் சுத்தமான கங்கை, யமுனை ஆறுகள்


ஊரடங்கால் சுத்தமான கங்கை, யமுனை ஆறுகள்
x
தினத்தந்தி 5 April 2020 12:09 PM IST (Updated: 5 April 2020 12:09 PM IST)
t-max-icont-min-icon

ஊரடங்கால் தொழிற்சாலைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளதால் உத்தரப்பிரதேசத்தில் கங்கை ஆற்றுநீரின் தரம் மேம்பட்டுள்ளது.

லக்னோ

வைரஸ் பரவலை கட்டுக்குள் கொண்டுவர, மார்ச் 25 ந்தேதி முதல் மத்திய, மாநில அரசுகள், நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தியுள்ள நிலையில், மக்கள் வீடுகளில் முடங்கிக் கிடக்கின்றனர்.இதனால், பெரும்பாலான சாலைகள் வாகன போக்குவரத்து இல்லாமல் வெறிச்சோடி காணப்படு கின்றன.இதையடுத்து, காற்று மாசு, பெருமளவு குறைந்து காணப்படுகிறது.வாகன போக்குவரத்து இல்லாமல், டில்லி உள்ளிட்ட, 90 நகரங்களில் காற்று மாசு, பெருமளவு குறைந்து காணப்படுகிறது. 

இதனால் கங்கை, யமுனை ஆறுகளின் கரைகளில் உள்ள தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளதால் அவற்றில் இருந்து கழிவுகள் வெளியேறி ஆற்றில் கலப்பது முற்றிலும் நின்றுபோனது. இதனால் கான்பூரில் கங்கையாற்று நீரின் தரம் முன்பைவிட 50 விழுக்காடு அளவுக்கு மேம்பட்டுள்ளதாக இது குறித்து ஆய்வு மேற்கொண்ட வாரணாசி ஐஐடியின் பேராசிரியர் பி.கே.மிஸ்ரா தெரிவித்துள்ளார். 

Next Story