நாடு முழுவதும் தினமும் 60 லட்சம் கியாஸ் சிலிண்டர் தடையின்றி வினியோகம் - தர்மேந்திர பிரதான் தகவல்
நாடு முழுவதும் தினமும் 60 லட்சத்துக்கும் மேற்பட்ட சிலிண்டர்கள் வினியோகிக்கப்படுவதாக தர்மேந்திர பிரதான் கூறியுள்ளார்.
புதுடெல்லி,
மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத் துறை மந்திரி தர்மேந்திர பிரதான், அனைத்து ஆயில் மார்க்கெட்டிங் நிறுவனங்களைச் சேர்ந்த 700-க்கும் மேற்பட்ட மாவட்ட தொடர்பு அதிகாரிகளுடன் காணொலிக் காட்சி மூலம் கலந்துரையாடல் நடத்தினார்.
இந்த ஊரடங்கு காலத்தில் மக்களுக்கு தடையில்லாமல் எல்.பி.ஜி. எரிவாயு சிலிண்டர் கிடைப்பது பற்றியும், பிரதமரின் உஜ்வலா திட்டத்தின் கீழ் வரும் 8 கோடி குடும்பத்தினருக்கு 3 மாதங்களுக்கு இலவச சிலிண்டர்கள் வழங்குவதற்கான முன்னேற்பாடு பற்றியும் அவர் கேட்டறிந்தார்.
பின்னர் உரையாற்றிய மத்திய மந்திரி தர்மேந்திர பிரதான், 14.2 கிலோ எடையுடைய மூன்று சமையல் எரிவாயு சிலிண்டர்கள், உஜ்வலா திட்டத்தின் கீழ் வரும் குடும்பத்தினருக்கு வழங்கப்படும். இதற்கான தொகையை பயனாளிகளின் வங்கிக்கணக்கில் முன்கூட்டியே ஆயில் மார்க்கெட்டிங் நிறுவனங்கள் செலுத்தி விடுவார்கள். அதை சிலிண்டர் பெறுவதற்காக அவர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று குறிப்பிட்டார்.
மேலும், 15 முனையங்கள், 195 பாட்லிங் நிலையங்கள் இடைவிடாமல் இயங்கி வருவதால், எல்.பி.ஜி. பொருட்கள் நாட்டு மக்களுக்கு தடையில்லாமல் கிடைப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தினமும் 60 லட்சத்துக்கும் மேற்பட்ட சிலிண்டர்கள் வினியோகிக்கப்படுகின்றன என்றும் அவர் கூறினார்.
Related Tags :
Next Story