இந்தியாவில் கொரோனா நோயாளிகள்; ஆண்கள் 76%, பெண்கள் 24%
இந்தியாவில் கொரோனா நோயாளிகளில் 76% பேர் ஆண்கள் என்றும் 24% பேர் பெண்கள் என்றும் சுகாதார துறை தெரிவித்து உள்ளது.
புதுடெல்லி,
நாட்டில் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. இதனை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இதுபற்றி சுகாதார துறை இணை செயலாளர் லாவ் அகர்வால் வெளியிட்டு உள்ள செய்தியில், கடந்த 24 மணிநேரத்தில் உறுதியான கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 693 ஆகும். இதுவரை 4,067 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. அவர்களில் 1,445 பேர் டெல்லி நிஜாமுதீனில் நடந்த தப்லிக் மாநாட்டில் கலந்து கொண்டவர்கள். நாட்டில் 109 பேர் கொரோனா பாதிப்புக்கு பலியாகி உள்ளனர்.
இந்தியாவில் கொரோனா நோயாளிகளில் 76% பேர் ஆண்கள் மற்றும் 24% பேர் பெண்கள் என தெரிவித்து உள்ளார்.
நாட்டில் கொரோனா பாதித்தோரில் 47% பேர் 40 வயதுக்கு உட்பட்டோர் ஆவர். 34% பேர் 40 முதல் 60 வயதுக்கு உட்பட்டவர்கள். 19% பேர் 60 மற்றும் அதற்கு மேற்பட்ட வயது உடையவர்கள் ஆவர் என்று தெரிவித்துள்ளார்.
இதேபோன்று பலியானவர்களில் 73% பேர் ஆண்கள் மற்றும் 27% பேர் பெண்களாக உள்ளனர். 63% நோயாளிகள் 60 மற்றும் அதற்கு மேற்பட்ட வயது உடையோராக உள்ளனர். 30% பேர் 40 முதல் 60 வயதுக்கு உட்பட்டோர் ஆவர். 7% பேர் 40 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் ஆவர் என்றும் அவர் தெரிவித்து உள்ளார்.
Related Tags :
Next Story