ஊரடங்கு உத்தரவு நீட்டிப்பு; நாட்டின் நலனை கருத்தில் கொண்டே அரசு முடிவெடுக்கும்: மத்திய மந்திரி


ஊரடங்கு உத்தரவு நீட்டிப்பு; நாட்டின் நலனை கருத்தில் கொண்டே அரசு முடிவெடுக்கும்:  மத்திய மந்திரி
x
தினத்தந்தி 6 April 2020 9:05 PM IST (Updated: 6 April 2020 9:05 PM IST)
t-max-icont-min-icon

ஊரடங்கு உத்தரவு நீட்டிப்பு குறித்து கூறிய மத்திய மந்திரி பிரகாஷ் ஜவடேகர் நாட்டின் நலனை கருத்தில் கொண்டே அரசு முடிவெடுக்கும் என கூறினார்.

புதுடெல்லி,

மத்திய அமைச்சரவை குழு கூட்டம் காணொலி காட்சி மூலம் இன்று நடந்தது.  கொரோனா தொற்று பரவாமல் தடுப்பது, இதற்காக அனைத்து துறைகளும் ஒருங்கிணைந்து பணியாற்றுவது குறித்து விவாதிக்கப்பட்டது.

கூட்டம் முடிந்ததும் மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கூறியதாவது:

கொரோனா பரவலை தடுப்பதற்காக 21 நாட்கள் ஊடங்கு உத்தரவு அமலில் உள்ளது. நிலைமையை மத்திய அரசு உன்னிப்பாக கவனித்து வருகிறது. உலகம் முழுவதும் எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகளை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம்.

தற்போது எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. சரியான நேரத்தில் இதுதொடர்பாக முடிவெடுக்கப்படும். அதன் பிறகே இதுபற்றி ஏதும் கூற முடியும். எந்த முடிவு எடுக்கப்பட்டாலும் அது மக்களின் நலன் கருதியே இருக்கும். நாட்டின் நலனை கருத்தில் கொண்டே அரசு முடிவெடுக்கும் என கூறினார்.

Next Story