நாம் வைரசை விட பலசாலி என ஒருவரும் நினைத்து விட கூடாது; கொரோனாவில் இருந்து மீண்டவர் பேட்டி


நாம் வைரசை விட பலசாலி என ஒருவரும் நினைத்து விட கூடாது; கொரோனாவில் இருந்து மீண்டவர் பேட்டி
x
தினத்தந்தி 6 April 2020 9:44 PM IST (Updated: 6 April 2020 9:44 PM IST)
t-max-icont-min-icon

நாம் வைரசை விட பலசாலி என ஒருவரும் நினைத்து விட கூடாது என்று கொரோனாவில் இருந்து மீண்டவர் பேட்டியில் கூறியுள்ளார்.

சண்டிகர்,

கொரோனா பாதிப்பு ஏற்பட்ட சண்டிகரை சேர்ந்த யாஷ் என்பவர் அதில் இருந்து மீண்டுள்ளார்.  அவர் அளித்துள்ள பேட்டியில், கொரோனா வைரஸ் பாதிப்புக்கு பின்னர் விதிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவின் இடையிலும் பணியாற்றிய மருத்துவர்கள், சுகாதார பணியாளர்கள் மற்றும் அத்தியாவசிய சேவை வழங்கியவர்களுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன் என்று கூறினார்.

நாம் வைரசை விட பலசாலி என ஒருவரும் நினைத்து விட கூடாது.  சமூக இடைவெளியை நீங்கள் பழக்கப்படுத்தி கொள்ள வேண்டும்.  ஊரடங்கை மதித்து, விதிகளை பின்பற்ற வேண்டும் என்று கூறியுள்ளார்.

Next Story