இந்திய மக்கள் அனைவரும் ஒன்றுபட்டு போராடி கொரோனா வைரசுக்கு எதிரான போரில் வெற்றி பெறுவோம் - ராகுல் காந்தி சூளுரை


இந்திய மக்கள் அனைவரும் ஒன்றுபட்டு போராடி கொரோனா வைரசுக்கு எதிரான போரில் வெற்றி பெறுவோம் - ராகுல் காந்தி சூளுரை
x
தினத்தந்தி 7 April 2020 5:19 AM IST (Updated: 7 April 2020 5:19 AM IST)
t-max-icont-min-icon

இந்திய மக்கள் அனைவரும் ஒன்றுபட்டு போராடி கொரோனா வைரசுக்கு எதிரான போரில் வெற்றி பெறுவோம் என்று ராகுல் காந்தி கூறியுள்ளார்.

புதுடெல்லி,

21 நாள் ஊரடங்கு அமலில் இருந்துவரும் நிலையில் கடந்த வாரம் தொடங்கி இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவுதல் அதிகரித்து வருகிறது. இந்தியாவில் இந்த வைரஸ் தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை 4 ஆயிரத்தை கடந்து வேகமாக சென்று கொண்டிருக்கிறது.

இந்த தருணத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, கொரோனா வைரசுக்கு எதிராக இந்தியா போராடி வருவது குறித்து டுவிட்டரில் நேற்று ஒரு பதிவு வெளியிட்டார். அதில் அவர் கூறி இருப்பதாவது:-

மதம், ஜாதி, இன வேறுபாடுகளை ஒதுக்கி வைத்துவிட்டு ஒரே மக்களாக மக்கள் ஒன்றுபடுவதற்கான ஒரு வாய்ப்பாக கொரோனா வைரஸ், இந்தியாவுக்கு அமைந்துள்ளது. இந்த கொடிய வைரசை வீழ்த்த வேண்டும் என்பதுதான் பொதுவான நோக்கமாக இருக்கிறது. இரக்கம், பச்சாதாபம், சுய தியாகம் ஆகியவை இந்த நோக்கத்தின் மையமாக அமைந்துள்ளன. ஒன்றாக நாம் இந்தப் போரில் போராடி வெற்றி பெறுவோம்.

இவ்வாறு அதில் ராகுல் காந்தி கூறி உள்ளார். இந்த ஒற்றுமையின் செய்தியை எடுத்துக்காட்டும் வகையில், தோளிலும், இடுப்பிலும் கை போட்டவாறு ஒரு இந்து சிறுவனும், இஸ்லாமிய சிறுவனும் சிரித்துப் பேசியவாறு செல்லும் படம் ஒன்றையும் ராகுல் காந்தி, தனது டுவிட்டர் பக்கத்தில் இணைத்துள்ளார்.

Next Story