இந்தியாவில் கொரோனாவுக்கு பலி எண்ணிக்கை 124 ஆக உயர்வு


இந்தியாவில் கொரோனாவுக்கு பலி எண்ணிக்கை 124 ஆக உயர்வு
x
தினத்தந்தி 7 April 2020 9:23 PM IST (Updated: 7 April 2020 9:23 PM IST)
t-max-icont-min-icon

இந்தியாவில் கொரோனாவுக்கு பலி எண்ணிக்கை 124 ஆக உயர்ந்துள்ளது.

புதுடெல்லி,

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் தீவிரமடைந்துள்ளது.  கொரோனா தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள மத்திய அரசு தீவிர பணியாற்றி வருகிறது.

நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு 21 நாட்கள் அமலில் உள்ளது.  இந்த உத்தரவு கடந்த மார்ச் 24ந்தேதி பிறப்பிக்கப்பட்டது.  இதனால் பொதுமக்கள் தேவையின்றி வெளியே செல்வது தவிர்க்கப்பட்டு உள்ளது.

இந்தியாவில் கொரோனாவுக்கு பலி எண்ணிக்கை 124 ஆக உயர்ந்துள்ளது.  இதுபற்றி மத்திய சுகாதார மற்றும் குடும்பநல அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தியில், சிகிச்சை முடிந்து வீடு திரும்பியோர் எண்ணிக்கை 326ல் இருந்து 353 ஆக உயர்ந்து உள்ளது.  இந்தியாவில் கொரோனாவுக்கு பாதிக்கப்பட்டடோர் எண்ணிக்கை 4,421ல் இருந்து 4,789 ஆக உயர்ந்து உள்ளது.  நாட்டில் கொரோனாவுக்கு பலி எண்ணிக்கை 114ல் இருந்து 124 ஆக உயர்ந்துள்ளது என தெரிவித்து உள்ளது.

Next Story