தேசிய செய்திகள்

மே 15-ந்தேதி வரை பள்ளி- கல்லூரிகள் திறக்கப்படாது? + "||" + Extend Closure Of Schools, Colleges Till May 15, Recommend Group Of Ministers

மே 15-ந்தேதி வரை பள்ளி- கல்லூரிகள் திறக்கப்படாது?

மே 15-ந்தேதி வரை பள்ளி- கல்லூரிகள் திறக்கப்படாது?
பள்ளிகள், கல்லூரிகளை திறப்பதை மே 15 வரை நீட்டிக்கவும், அமைச்சர்கள் குழு பரிந்துரைத்து உள்ளது
புதுடெல்லி

இந்தியாவில் கொரோனா காட்டுத்தீ போல் வேகமாக பரவ தொடங்கியதால், அதை கட்டுப்படுத்தும் வகையில் நாடு முழுவதும் 21 நாள் ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக பிரதமர் மோடி கடந்த 24-ந் தேதி இரவு அறிவித்தார். ஊரடங்கு அமலுக்கு வந்தபோது இந்தியாவில் கொரோனாவால் 519 பேர் பாதிக்கப்பட்டு இருந்தனர். 9 பேர் உயிரிழந்து இருந்தனர்.

ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு நேற்றுடன் 14 நாட்கள் ஆகிவிட்ட நிலையில், நாடு முழுவதும் கொரோனாவுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 117 ஆக உயர்ந்து இருக்கிறது. பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,420-ஐ தாண்டிவிட்டது. இதனால் கொரோனா பரவுவதை கட்டுப்படுத்துவது எப்படி? என்று தெரியாமல் அதிகாரிகள் திணறிக்கொண்டு இருக்கிறார்கள்.

இந்தநிலையில் 21 நாள் ஊரடங்கு வருகிற 14-ந் தேதியுடன் (செவ்வாய்க்கிழமை) முடிவடைகிறது. அதற்கு இன்னும் ஒரு வாரம்தான் இருக்கிறது. அதற்குள் நோய்க்கிருமி பரவுவது கட்டுக்குள் வந்துவிடுமா? என்று தெரியவில்லை.

இதனால், 14-ந் தேதிக்கு பிறகும் ஊரடங்கை நீட்டிக்க வேண்டும் என்று பல மாநிலங்களும், நிபுணர்களும் மத்திய அரசை கேட்டுக்கொண்டு இருப்பதாகவும், அதுபற்றி மத்திய அரசு யோசித்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. ஊரடங்கை நீட்டித்தால்தான் உயிரிழப்புகளை தடுக்க முடியும் என்று பல மாநிலங்கள் கருதுகின்றன.

எனவே ஊரடங்கு நீட்டிக் கப்படுமா? இல்லையா? என்பது 14-ந் தேதிக்கு ஒரிரு நாட்களுக்கு முன்னர்தான் தெரியவரும் என்றும், ஊரடங்கு நீட்டிக்கப்படும் பட்சத்தில், கொரோனா பாதிப்பு இல்லாத மாவட்டங்களில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்படலாம் என்றும் கருதப்படுகிறது.

ஏப்ரல் 14 க்கு பிறகு ஊரடங்கை நீட்டிக்க மாநில அரசுகள் மற்றும் நிபுணர்களின் கோரிக்கைகளை மத்திய அரசு பரிசீலித்து வருவதால், அமைச்சர்கள் குழு (GoM) செவ்வாய்க்கிழமை அனைத்து கல்வி நிறுவனங்களையும் மூடுவதையும் அனைத்து மதங்களையும் கட்டுப்படுத்தவும் பரிந்துரைத்தது.

பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையிலான  கூட்டத்தில், மத மையங்கள், வணிக வளாகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் ஏப்ரல் 14 முதல் குறைந்தது நான்கு வாரங்களுக்கு சாதாரண செயல்பாடுகளை மீண்டும் தொடங்க அனுமதிக்கக்கூடாது என்று முடிவு செய்தன. 

மே மாதத்தின் நடுப்பகுதியில் இருந்து கோடை விடுமுறை தொடங்கும் என்பதால், ஜூன் இறுதி வரை பள்ளிகளும் கல்லூரிகளும் அதிகமாகவோ அல்லது குறைவாகவோ மூடப்படும் என்பது அரசாங்கத்தின் எண்ணம் என பிடிஐ கூறி உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. ஊரடங்கு உத்தரவு காரணமாக வீடுகளில் திருட முடியாததால் நகை கடையில் கொள்ளையடித்தேன் கைதான ஆசாமி போலீசில் பரபரப்பு வாக்குமூலம்
ஊரடங்கு உத்தரவு காரணமாக வீடுகளில் திருட முடியாததால் நகை கடையில் கொள்ளையடித்தேன் என்று நகைக்கடை கொள்ளை வழக்கில் கைதான ஆசாமி போலீசில் பரபரப்பு வாக்குமூலம் கொடுத்துள்ளார்.
2. ஊரடங்கு உத்தரவால் களை இழந்து காணப்படும் மாமல்லபுரம் புராதன சின்னங்கள்
ஊரடங்கு உத்தரவு காரணமாக மாமல்லபுரத்தில் புராதன சின்னங்கள் களை இழந்து காணப்படுகின்றன.
3. ஊரடங்கை நீட்டிக்க தமிழக அமைச்சரவை ஒப்புதல் எனத் தகவல்
ஊரடங்கை நீட்டிக்க தமிழக அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டதாக தகவல்கள் கூறுகின்றன.
4. ஊரடங்கு உத்தரவால் தாய்க்கு இறுதி சடங்கு செய்ய வரமுடியாமல் தவித்த ராணுவ வீரர்
ஊரடங்கு உத்தரவால் தாய்க்கு இறுதி சடங்கு செய்ய வரமுடியாமல் தவித்த ராணுவ வீரர் செல்போனில் தாயாரின் உடலை பார்த்து கதறி துடித்தார்.
5. ஊரடங்கு உத்தரவு எதிரொலி: ராமேசுவரத்தில் சைக்கிள் ஓட்டுவதில் ஆர்வம் காட்டும் பொதுமக்கள்
ஊரடங்கு உத்தரவு எதிரொலியாக ராமேசுவரம் பகுதியில் சைக்கிள் ஓட்டுவதில் பொதுமக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனால் பழைய சைக்கிள்கள் திடீரென அதிக விலைக்கு விற்கப்படுகிறது.