மராட்டியத்தில் மேலும் 60 பேருக்கு கொரோனா பாதிப்பு
மராட்டியத்தில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 1,078 ஆக உயர்ந்துள்ளது.
மும்பை,
இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. நாட்டிலேயே மராட்டிய மாநிலத்தில் தான் கொரோனா பாதிப்பு அதிகமாக காணப்படுகிறது. நேற்று ஒருநாளில் மட்டும் மராட்டியத்தில் 116 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதனால், 1,018 ஆக உயர்ந்தது.
இந்த நிலையில், மராட்டியத்தில் இன்று மேலும் 60 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதன்மூலம், மராட்டியத்தில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டோரின் எண்ணிக்கை 1,078 ஆக உயர்ந்துள்ளது. புதிதாக தொற்று உறுதியான 66 பேரில் 44 பேர் மும்பையை சேர்ந்தவர்கள் ஆவர்.
Related Tags :
Next Story