கொரானா: இந்தியா உள்பட தெற்காசியா 40 ஆண்டுகளில் மிக மோசமான பொருளாதார வீழ்ச்சியை சந்திக்கும்


கொரானா: இந்தியா உள்பட தெற்காசியா 40 ஆண்டுகளில் மிக மோசமான பொருளாதார வீழ்ச்சியை சந்திக்கும்
x
தினத்தந்தி 12 April 2020 12:37 PM IST (Updated: 12 April 2020 12:37 PM IST)
t-max-icont-min-icon

கொரானா பாதிப்பால் 40 ஆண்டுகளில் தெற்காசியா மிக மோசமான பொருளாதார வீழ்ச்சியை சந்திக்கும் என உலக வங்கி கணித்துள்ளது.

புதுடெல்லி

180 கோடி மக்கள் தொகையையும் உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட நகரங்களையும் கொண்ட இந்தியா, வங்காளதேசம், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் பிற சிறிய நாடுகள் இதுவரை ஒப்பீட்டளவில் குறைவான கொரோனா வைரஸ் வழக்குகளைப் பதிவு செய்துள்ளன, ஆனால் அவை அடுத்த ஹாட்ஸ்பாட்களாக மாறக்கூடும் என நிபுணர்கள் அஞ்சுகின்றனர்.

கொரோனா வைரஸ் வெடித்ததால் இந்தியா மற்றும் பிற தெற்காசிய நாடுகள் இந்த ஆண்டு 40 ஆண்டுகளில் இல்லாத மிக மோசமான பொருளாதார வளர்ச்சி செயல்திறனை பதிவு செய்ய வாய்ப்புள்ளது என்று உலக வங்கி ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளது.

சிலநாடுகள் மோசமான பொருளாதார விளைவுகளால் ஏற்கனவே பாதிக்கப்பட்டு உள்ளன, பரவலான ஊரடங்கால்  இயல்பான செயல்பாடுகள் முடங்கி உள்ளன. மேற்கத்திய தொழிற்சாலை ஆர்டர்கள் ரத்து செய்யப்பட்டன மற்றும் ஏராளமான ஏழை தொழிலாளர்கள் திடீரென வேலையில்லாமல் திண்டாடி வருகின்றனர்.

இந்தியாவைத் தவிர, இலங்கை, நேபாளம், பூட்டான் மற்றும் வங்காள தேசம் பொருளாதார வளர்ச்சியில் கூர்மையான வீழ்ச்சியைக் காணும் என்று உலக வங்கி கணித்துள்ளது.

இதுகுறித்து  உலக வங்கி அறிக்கை கூறி உள்ளதாவது:-

"தெற்காசியா பாதகமான விளைவுகளை கண்டு வருகிறது. சுற்றுலா தொழில் கடுமையாக வறண்டுஉள்ளது, விநியோகச் சங்கிலிகள் சீர்குலைந்துள்ளன, ஆடைகளுக்கான தேவை சரிந்துள்ளது மற்றும் நுகர்வோர் மற்றும் முதலீட்டாளர்களின் உணர்வுகள் மோசமடைந்துள்ளன.

இந்த ஆண்டுக்கான அதன் வளர்ச்சி கணிப்பை தொற்றுநோய்க்கு முந்தைய 6.3 சதவிகிதத்தில் 1.8-2.8 சதவீதமாகக் குறைத்து உளளது. குறைந்தது பாதி நாடுகளாவது "ஆழ்ந்த மந்தநிலையில்" வீழ்ந்து உள்ளன.

பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் மாலத்தீவு ஆகிய மூன்று நாடுகள் மந்தநிலையில் விழும்.

சுற்றுலாவின் சரிவு இந்தியா மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 13 சதவிகிதமாக சுருங்கிவிடும், ஆப்கானிஸ்தான் 5.9 சதவிகிதம் மற்றும் பாகிஸ்தான் 2.2 சதவிகிதம் வரை சுருங்கக்கூடும்.

ஏப்ரல் 1 ஆம் தேதி நிதியாண்டு தொடங்கியதில்  இந்தியா, நடப்பு நிதியாண்டில் வெறும் 1.5-2.8 சதவீத வளர்ச்சியைக் காணும், இது முடிவடைந்த ஆண்டிற்கான 4.8-5.0 சதவீதத்திலிருந்து குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது என்று வங்கி கணித்துள்ளது.

தெற்கு ஆசியாவில்  சமத்துவமின்மையை இந்த தொற்றுநோய் வலுப்படுத்தும் என்றும், சுகாதாரமற்ற அல்லது சமூக பாதுகாப்புக்கு மட்டுப்படுத்தப்பட்ட அல்லது அணுகல் இல்லாத முறைசாரா தொழிலாளர்களை பாதிக்கிறது என்றும் அறிக்கை எச்சரித்தது.

உதாரணமாக, இந்தியாவில், உலகின் மிகப்பெரிய ஊரடங்கு அறிவிக்கபட்டு உள்ளது. நூறாயிரக்கணக்கான புலம்பெயர்ந்த தொழிலாளர்களை தங்கள் சொந்த கிராமங்களுக்குத் திரும்பத் வேண்டியதாகி உள்ளது, பலர்  நூறு கிலோமீட்டர்கள் கால்நடையாக நடந்து சொந்த ஊர் திரும்பி உள்ளனர்.

அரசாங்கங்கள் "சுகாதார அவசரத்தைக் கட்டுப்படுத்தவும், தங்கள் மக்களை, குறிப்பாக ஏழ்மையான மற்றும் மிகவும் பாதிக்கப்படக்கூடியவர்களைப் பாதுகாக்கவும், விரைவான பொருளாதார மீட்சிக்கு இப்போது களம் அமைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று உலக வங்கி தெரிவித்துள்ளது.

Next Story