பஞ்சாப்பில் பயங்கரம் - ஊரடங்கின் போது காவல்துறை மீது தாக்குதல்
ஊரடங்கை மீறி வெளியே சுற்றிய கும்பல், விசாரணை நடத்திய காவல்துறையினர் மீது தாக்குதல் நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாட்டியாலா,
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, பஞ்சாபில் மே1 ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால், மக்கள் அத்தியாவசிய தேவைகளைத் தவிர பிற காரணங்களுக்கு வெளியில் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இன்று காலை 6.00 மணியளவில், பாட்டியாலா மாவட்டம், பால்பேரா கிராமத்தில் உள்ள காய்கறி மண்டி பகுதியில், நிகாங் என்று கூறப்படும் மதக் குழுவினர் வாகனத்தில் வந்தனர். அவர்கள் வந்த வாகனம் சாலை தடுப்புகளில் மோதியது.
இதைக் கவனித்த போலீசார், ஊரடங்கு காலத்தில் வெளியில் வருவதற்கான ஆவணங்களை கேட்டுள்ளனர். ஆனால், அவர்களிடம் அதற்கான ஆவணங்கள் (பாஸ்) இல்லை. இதையடுத்து, திடீரென அந்தக் கும்பல் காவல் துறையினர் மீது தாக்குதல் நடத்தத் தொடங்கியது. இந்தத் தாக்குதலில் காவல் ஆய்வாளர் ஒருவரின் கை வெட்டப்பட்டது. மேலும், இரு காவலர்கள் படுகாயம் அடைந்தனர்.
தாக்குதல் நடத்தியவர்கள் குருத்வாரா சாஹேப்பிற்கு தப்பிச் சென்றபின், காவல்துறையினர் கூடுதல் படைகளுடன் அங்கு சென்றனர். பின்னர் தலைவர்கள் தலைமையில் இரண்டுமணி நேர பேச்சுவார்த்தைக்குப் பிறகு குற்றவாளிகள் சரணடைந்துள்ளனர். அவர்கள் சரணடைந்த போது அவர்களிடமிருந்து வாள்களையும், எரிவாயு சிலிண்டர்களையும் மீட்டதாக போலீசார் தெரிவித்தனர். தாக்குதலுக்கு உள்ளான காவல்துறை துணை ஆய்வாளர் ஹர்ஜீத் சிங் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு, அவருக்கு அறுவை சிகிச்சை நடைபெற்று வருகின்றது.
Related Tags :
Next Story