டெல்லியில் 2-வது நாளாக நில அதிர்வு உணரப்பட்டதால் மக்கள் அச்சம்


டெல்லியில் 2-வது நாளாக நில அதிர்வு உணரப்பட்டதால் மக்கள் அச்சம்
x
தினத்தந்தி 13 April 2020 9:46 AM GMT (Updated: 2020-04-13T15:16:38+05:30)

டெல்லியில் 2-வது நாளாக நில அதிர்வு உணரப்பட்டதால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

புதுடெல்லி,

டெல்லியில், நேற்று மாலை 5.45 மணிக்கு திடீரென நில நடுக்கம் ஏற்பட்டது. அது, ரிக்டர் அளவுகோலில் 3.5 ஆக பதிவானது. வடகிழக்கு டெல்லியில் வசிராபாத் பகுதியில் பூமிக்கு அடியில் 8 கி.மீ. ஆழத்தில் நில நடுக்கம் மையம் கொண்டிருந்தது. 

இதனால், டெல்லி அதிர்ந்தது. கொரோனா வைரசுக்காக வீடுகளில் முடங்கி இருந்த மக்கள், பீதியடைந்து வெளியே ஓடி வந்தனர். டெல்லி அருகே நொய்டா, காசியாபாத், பரீதாபாத் ஆகிய நகரங்களிலும் நில நடுக்கம் உணரப்பட்டது.

இந்த நிலையில், 2-வது நாளாக இன்றும் டெல்லியில் நில அதிர்வு உணரப்பட்டது. இன்று மதியம் 1.26 மணியளவில் உணரப்பட்ட இந்த நில அதிர்வு ரிக்டர் அளவில் 2.7 ஆக பதிவாகியுள்ளது. தொடர்ந்து 2-வது நாளாக நில அதிர்வு உணரப்பட்டதால் மக்கள் பீதி அடைந்தனர். 

Next Story