சீனாவில் இருந்து வரவேண்டிய கொரோனா சோதனைக்கருவி ஏப்ரல் 15-ந்தேதி வந்து சேரும் - ஐ.சி.எம்.ஆர்
சீனாவில் இருந்து வரவேண்டிய கொரோனா சோதனைக்கருவி ஏப்ரல் 15-ந்தேதி வந்து சேரும் என இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்து உள்ளது.
புதுடெல்லி
இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐ.சி.எம்.ஆர்) ராமன் ஆர் கங்ககேத்கர் கூறியதாவது:-
796 கோவிட் -19 வழக்குகள், கடந்த 24 மணி நேரத்தில் 796 புதிய கொரோனா பாதிப்புகளும் 35 இறப்புகளும் பதிவாகியுள்ளன.இந்தியாவில் சில மாவட்டங்களில் கடந்த 14 நாட்களில் எந்த புதிய கொரோனா பாதிப்புகளும் இல்லை.முன்னதாக கொரோனா பாதித்த 15 மாநிலங்களில் 25 மாவட்டங்கள் 14 நாட்களில் புதிய பாதிப்பு இல்லை.
நேற்று வரை, நாங்கள் 2,06,212 கொரோனோ சோதனைகளை நடத்தி உள்ளோம். கவலைப்படத் தேவையில்லை, இன்று நாம் சோதனைகளை மேற்கொண்டுள்ள வேகம், இதன் மூலம் அடுத்த 6 வாரங்களுக்கு எளிதாக சோதனைகளை நடத்த முடியும்.ம்.
சீனாவில் இருந்து வரவேண்டிய சோதனைக்கருவி ஏப்ரல்15 ந்தேதி வந்து சேரும்.
ஊரடங்கு நடவடிக்கைகளைச் மாநிலங்கள் தொடர்ந்து செயல்படுத்தி வருகின்றன. ஓய்வுபெற்ற பணியாளர்கள், என்.எஸ்.எஸ் (தேசிய சேவை திட்டம்) மற்றும் என்.சி.சி கேடட்கள் மற்றும் பிற துறைகளின் அதிகாரிகளும் ஊரடங்கு நடவடிக்கைகளை அமல்படுத்துவதில் போலீசாருக்கு உதவுகிறார்கள் என கூறினார்.
Related Tags :
Next Story