முப்படை தலைமை தளபதி மற்றும் தளபதிகள் இன்று மாலை செய்தியாளர்களை சந்திக்கின்றனர்


முப்படை தலைமை தளபதி மற்றும் தளபதிகள் இன்று மாலை செய்தியாளர்களை சந்திக்கின்றனர்
x
தினத்தந்தி 1 May 2020 3:56 PM IST (Updated: 1 May 2020 3:56 PM IST)
t-max-icont-min-icon

முப்படை தலைமை தளபதி மற்றும் தளபதிகள் இன்று மாலை 6 மணிக்கு செய்தியாளர்களை சந்திக்கின்றனர்.

புதுடெல்லி,

முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் மற்றும் முப்படைகளின் தளபதிகள் இன்று மாலை 6 மணிக்கு செய்தியாளர்களை சந்திக்கின்றனர்.  கொரோனா தடுப்பு பணியில் முப்படைகளின் பணிகள் பற்றி இந்த செய்தியாளர்கள் சந்திப்பில் விளக்கப்படும் என்று கூறப்படுகிறது. 

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுக்குள் கொண்டு வர பிறப்பிக்கப்பட்ட தேசிய ஊரடங்கு வரும் 3 ஆம் தேதியோடு நிறைவுக்கு வர உள்ளது. மே.3 ஆம் தேதிக்கு பிறகு ஊரடங்கு நீட்டிக்கப்படுமா? அல்லது கட்டுப்பாடுகளுடன் தளர்த்தப்படுமா? என்ற எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. இந்தியாவில் தற்போதைய நிலவரப்படி கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை  35043 ஆக உள்ளது. 

Next Story