கொரோனா எதிரொலி: டெல்லியில் உள்ள சி.ஆர்.பி.எப். தலைமை அலுவலகத்திற்கு சீல் வைப்பு


கொரோனா எதிரொலி: டெல்லியில் உள்ள சி.ஆர்.பி.எப். தலைமை அலுவலகத்திற்கு சீல் வைப்பு
x
தினத்தந்தி 3 May 2020 1:03 PM IST (Updated: 3 May 2020 1:03 PM IST)
t-max-icont-min-icon

கொரோனா எதிரொலி காரணமாக டெல்லியில் உள்ள சி.ஆர்.பி.எப். தலைமை அலுவலகத்திற்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.

புதுடெல்லி,

இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்த நிலையில் கொரோனா வைரஸ் பொது மக்களை மட்டுமின்றி சுகாதாரத் துறையினர், காவல் துறையினர், துப்புரவு பணியாளர்கள், மற்றும் ராணுவ வீரர்கள் உள்பட அனைவரையும் தாக்க தொடங்கி விட்டதால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. இன்று சத்தீஷ்கர் மாநிலத்தின் முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதி ஒருவரும் கொரோனாவால் உயிரிழந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில்,டெல்லியில் சி.ஆர்.பி.எப். உயரதிகாரியுடன் ஒருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து டெல்லியில் உள்ள சி.ஆர்.பி.எப். தலைமை அலுவலகத்திற்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.

மேலும் கொரோனாவால் பாதிக்கப்பட்ட சி.ஆர்.பி.எப். வீரர்கள் தற்போது தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.  அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. கட்டிடத்திற்குள் யாரும் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என மத்திய ரிசர்வ் போலீஸ் படை தெரிவித்துள்ளது.

ஏற்கெனவே டெல்லி பட்டாலியனைச் சேர்ந்த 135 வீரர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story