சரக்கு போக்குவரத்து பிரச்சினைக்கு தீர்வு காண மத்திய உள்துறை அமைச்சக கட்டுப்பாட்டு அறை
சரக்கு போக்குவரத்து பிரச்சினைக்கு தீர்வு காண மத்திய உள்துறை அமைச்சக கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது.
புதுடெல்லி,
ஊரடங்கின்போது, மாநிலங்களுக்கு இடையே சரக்கு போக்குவரத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், சரக்கு போக்குவரத்தின்போது, டிரைவர்கள், வாகன உரிமையாளர்கள் சந்திக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண மத்திய உள்துறை அமைச்சக கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது.
கட்டுப்பாட்டு அறை எண் 1930 ஆகும். அங்கு மத்திய சாலை போக்குவரத்து அமைச்சக அதிகாரிகளும் பணியில் இருப்பார்கள்.
அத்துடன், தேசிய நெடுஞ்சாலைகளில் சந்திக்கும் பிரச்சினைகளுக்கு தேசிய நெடுஞ்சாலை ஆணைய உதவிமைய எண் 1033-ஐ தொடர்பு கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story