ஏப்ரல் மாதத்தில் பெட்ரோல்-டீசல் விற்பனை குறைந்தது


ஏப்ரல் மாதத்தில் பெட்ரோல்-டீசல் விற்பனை குறைந்தது
x
தினத்தந்தி 5 May 2020 2:51 AM IST (Updated: 5 May 2020 2:51 AM IST)
t-max-icont-min-icon

கொரோனா வைரஸ் பாதிப்பால், ஏப்ரல் மாதத்தில் பெட்ரோல்-டீசல் விற்பனை சுமார் 70 சதவீதம் குறைந்துள்ளது.

புதுடெல்லி,

இந்தியாவில் பயன்படுத்தப்படும் எரிபொருள்களில் டீசலின் பங்கு மட்டும் 40 சதவீதமாகவும், பெட்ரோலின் பங்கு கணிசமாகவும் உள்ளது.

கடந்த ஏப்ரல் மாதத்தில் டீசல் விற்பனை 56 சதவீதம் குறைந்து 28 லட்சம் டன்னாக உள்ளது. சென்ற ஆண்டு ஏப்ரல் மாதத்தில் அது 65 லட்சம் டன்னாக இருந்தது. பெட்ரோல் விற்பனை 61 சதவீதம் சரிவடைந்து (20 லட்சம் டன்னில் இருந்து) 8.70 லட்சம் டன்னாக குறைந்து இருக்கிறது. விமான எரிபொருள் விற்பனை 91 சதவீதம் சரிவடைந்துள்ளது. எனினும், சமையல் எரிவாயு விற்பனை 12 சதவீதம் அதிகரித்து 21 லட்சம் டன்னாக உள்ளது.

Next Story