பீகாருக்கு திரும்பி வரும் மாணவர்கள் ரெயில் கட்டணம் செலுத்த தேவையில்லை; நிதிஷ்குமார் அறிவிப்பு
வெளிமாநிலங்களில் இருந்து பீகாருக்கு திரும்பி வரும் மாணவர்கள், ரெயில் கட்டணம் செலுத்த தேவையில்லை என்று பீகார் மாநில முதல்-மந்திரி நிதிஷ்குமார் அறிவித்துள்ளார்.
பாட்னா,
பீகார் மாநில முதல்-மந்திரி நிதிஷ்குமார் செய்தியாளர்களிடம் கூறும்பொழுது, மாணவர்களுக்கான கட்டணத்தை ரெயில்வேக்கு பீகார் அரசே நேரடியாக செலுத்தி விடும். அதுபோல், சிறப்பு ரெயிலில் வரும் புலம்பெயர் தொழிலாளர்கள், ரெயில் நிலையத்தில் இருந்து அவரவர் வட்டாரத்தின் தலைமையகத்துக்கு அழைத்து செல்லப்படுவார்கள்.
அங்கு 21 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவர். அதன்பிறகு அவர்கள் ரெயில் கட்டணத்துக்கு செலவளித்த தொகை முழுமையாக திருப்பி தரப்படும். அத்துடன், கூடுதலாக தலா ரூ.500 வழங்கப்படும் என்று கூறினார்.
Related Tags :
Next Story