குழந்தையை இழுத்து செல்ல முயலும் குரங்கு வைரலாகும் வீடியோ


குழந்தையை இழுத்து செல்ல முயலும் குரங்கு வைரலாகும் வீடியோ
x
தினத்தந்தி 5 May 2020 9:45 AM IST (Updated: 5 May 2020 9:45 AM IST)
t-max-icont-min-icon

குரங்கு ஒன்று குழந்தையை இழுத்து செல்ல முயலும் வீடியோசமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது.

மும்பை

முன்னாள் பேஸ்பால் வீரரான ரெக்ஸ் சாப்மேன் என்பவர் தனது டுவிட்டரில் ஒரு வீடியோவை பகிர்ந்து உள்ளார். அதில் ஒரு சைக்கிளில் வரும் குரங்கு, குழந்தையை இழுத்துச் செல்லும் சம்பவம் குறித்து நான் கேள்விப்பட்டதே இல்லை…' என்று பதிவிட்டு உள்ளார்.

வீடியோவில் குரங்கு ஒன்று சைக்கிளில் வருகிறது. திடீரென்று சிலர் அமர்ந்திருக்கும் இடத்திற்கு அருகே சைக்கிளை போட்டுவிட்டு, அங்கு அமர்ந்திருக்கும் பெண் குழந்தையைப் பிடித்து இழுக்கிறது. குரங்கு இப்படி செய்யும் என்று சற்றும் எதிர்பார்க்காத அந்தக் குழந்தை, கீழே விழுகிறது. அதைத் தொடர்ந்து அந்தக் குழந்தையின் சட்டையைப் பிடித்து தர தரவென இழுத்துச் செல்கிறது குரங்கு. ஒரு கட்டத்தில் அருகில் இருக்கும் நபர் குரங்கை அதட்ட அது குழந்தையின் சட்டையிலிருந்த பிடியை விடுகிறது. 

திகைப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தும் இந்த வீடியோ இதுவரை 40 லட்சம் முறைக்கு மேல் பார்க்கப்பட்டுள்ளது இந்த வீடியோ குறித்து பல்வேறு தரப்பினர் கருத்து தெரிவித்து உள்ளனர்

அதில் ஒருவர், குரங்கின் உரிமையாளர் அருகில்தான் உள்ளார். அவர் அதன் கழுத்தில் ஒரு கயிற்றைக் கட்டியுள்ளார். குழந்தைக்கு அருகில் சென்று குரங்கு நடந்து கொண்டதை அவர் எதிர்பார்க்கவில்லை. குழந்தையை குரங்கு இழுக்க முயன்றபோது அந்த உரிமையாளரும் கயிற்றை இழுத்துள்ளார். இதனால்தான் குரங்கு, குழந்தையை இழுப்பது போல தெரிகிறது என கூறி உள்ளார்.



Next Story