இந்தியாவில் ஜிஹாத்தை நடத்துமாறு அல் கொய்தா அழைப்பு


இந்தியாவில் ஜிஹாத்தை நடத்துமாறு அல் கொய்தா அழைப்பு
x
தினத்தந்தி 5 May 2020 5:55 PM IST (Updated: 5 May 2020 5:55 PM IST)
t-max-icont-min-icon

இந்தியாவில் நடைபெறும் பாகுபாடு மற்றும் இனப்படுகொலைக்கு எதிராக இந்திய முஸ்லீம்களையும் அறிஞர்களையும் இணைந்து ஜிஹாத்தை நடத்துமாறு அல் கொய்தா அறிக்கை வெளியிட்டு உள்ளது.

புதுடெல்லி

அரேபிய தீபகற்பத்தில் உள்ள உலகளாவிய பயங்கரவாதக் குழு (ஏகியூஏபி) இந்தியாவில் நடைபெறும் பாகுபாடு மற்றும் இனப்படுகொலைக்கு எதிராக இந்திய முஸ்லீம்களையும் அறிஞர்களையும் இணைந்து  ஜிஹாத்தை நடத்துமாறு கேட்டுக் கொண்டுள்ளது.

அல்-கொய்தாவின் மத்திய கிழக்கு பிரிவின் இந்த அறிக்கை, உலகளாவிய ஜிகாதி குழு மற்றும் பாகிஸ்தானின் இன்டர் சர்வீசஸ் இன்டலிஜென்ஸ் ஆகியவற்றுக்கு இடையேயான தொடர்பை வெளிப்படுத்துவதாக இந்திய பாதுகாப்பு நிறுவனங்கள் கூறுகின்றன.

முஸ்லீம் பெரும்பான்மை வளைகுடா நாடுகளுடனான இந்தியாவின் உறவுகளை மோசமாக பாதிக்கும் மற்றும் இந்திய முஸ்லீம்களை  தூண்டிவிடுவதற்காக பாகிஸ்தான் அரசின் கூர்மையான சமூக ஊடக பிரச்சாரத்திற்கு ஆதரவளிக்க உலகளாவிய பயங்கரவாதக் குழுவுக்கு குடியுரிமைச் சட்டம் என்பது ஒரு நுழைவு புள்ளியாகும் என்று பாதுகாப்பு நிறுவனத்தின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார். 

நாங்கள் சமூக ஊடக பிரச்சாரத்தை ஆரம்பத்திலிருந்தே கண்காணித்து வருகிறோம், மேலும் இந்த தகவல் போரை நடத்துவதில் மிகவும் சுறுசுறுப்பான பங்கைக் கொண்ட 2,794 டுவிட்டர்களை அடையாளம் கண்டுள்ளோம். 

முஸ்லீம்களின் உரிமைகள் தொடர்பாக இந்தியாவையோ அல்லது அரசாங்கத்தையோ குறிவைத்து உருவாக்கப்பட்ட ஒவ்வொரு ஹேஷ்டேக்கையும் எங்களால் கண்டுபிடிக்க முடிந்தது, மேலும் அவை ஒவ்வொன்றும் எங்களை பாகிஸ்தானில் உள்ள டுவிட்டர் கணக்கிற்கு அழைத்துச் சென்றன என அதிகாரி ஒருவர் கூறினார்.

Next Story