கொரோனா பாதிப்புக்கு மராட்டியத்தில் பலி எண்ணிக்கை 617 ஆக உயர்வு
கொரோனா பாதிப்புக்கு மராட்டியத்தில் பலி எண்ணிக்கை 617 ஆக உயர்வடைந்து உள்ளது.
புனே,
இந்தியாவில் கொரோனா வைரஸ் தீவிர பாதிப்பு ஏற்படுத்தி வருகிறது. நாட்டில் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. எனினும், பாதிப்பு மற்றும் பலி எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. பொதுமக்கள் தங்களை காத்து கொள்ள ஊரடங்கு விதிகளை முறையாக கடைப்பிடிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.
நாட்டில் அதிக அளவாக மராட்டியத்தில் 15,525 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் 34 பேர் பலியான நிலையில், பலி எண்ணிக்கை 583ல் இருந்து 617 ஆக உயர்ந்து உள்ளது. 2 ஆயிரத்து 819 பேர் பாதிப்பில் இருந்து விடுபட்ட நிலையில் வீடு திரும்பி உள்ளனர்.
கோவாவில் பாதிப்பு உறுதி செய்யப்பட்ட 7 பேரும் சிகிச்சை முடிந்து சென்றுள்ளனர். இதனால் கொரோனாவில் இருந்து முழு அளவில் விடுபட்ட நிலையை கோவா அடைந்துள்ளது. இதனை தொடர்ந்து மணிப்பூர் மற்றும் அருணாசல பிரதேசம் ஆகியவையும் கொரோனா பாதிப்பில் இருந்து முழுவதும் விடுபட்டு உள்ளன.
Related Tags :
Next Story