ஊரடங்கால் இந்தியாவில் 4 பேரில் ஒருவருக்கு வேலை இழப்பு
ஊரடங்கால் இந்தியாவில் 4 பேரில் ஒருவருக்கு வேலை இழப்பு ஏற்பட்டு உள்ளது என பொருளாதார கண்காணிப்பு அமைப்பு தகவல் தெரிவித்துள்ளது.
புதுடெல்லி
இந்தியாவில் மார்ச்-ஏப்ரல் மாதங்களில் நான்கில் ஒருவர் வேலைவாய்ப்பை இழந்துள்ளதாக, நாட்டின் பொருளாதார நிலையை கண்காணிக்கும் சிஎம்ஐஇ அமைப்பு தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக சிஎம்ஐஇ அமைப்பு வெளியிட்டுள்ள மாதாந்திர அறிக்கையில், கொரோனா முன்னெச்சரிக்கையாக அமல்படுத்தப்பட்ட ஊரடங்கின் தாக்கத்தால், பல்வேறு முக்கிய துறைகளின் பொருளாதாரம் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக மே 3 ந் தேதி கணக்கீட்டின் படி இந்தியாவில் இதுவரை இல்லாத அளவிற்கு வேலையின்மை 27.11 சதவீதம் ஆக உயர்ந்துள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், அமைப்பு மற்றும் அமைப்பு சாரா தொழிலாளர்கள் பலரும் வேலை வாய்ப்பை இழப்பதால், அதிக அளவிலான மக்கள் வறுமையின் பிடியில் சிக்க வாய்ப்புள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story