ஆரோக்கிய சேது செயலி பாதுகாப்பானது- மத்திய அரசு
ஆரோக்கிய சேது செயலி பாதுகாப்பானது என்று மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கூறியுள்ளார்.
புதுடெல்லி,
கொரோனா வைரஸ் பரவலை கண்காணிக்க, ‘ஆரோக்கிய சேது’ செயலியை மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்று உடையவர்களுடன் நாம்தொடர்பில் இருந்தோமா என்ற விவரத்தை இந்த செயலி தெரிவிக்கும்.அதன் மூலம் முன்னெச்சரிக்கையாக இருக்கலாம். அரசு வெளியிட்டுள்ள ஆரோக்கிய சேது என்ற இந்த செயலியில், பாதுகாப்பு குறைபாடு இருப்பதாகவும் தனியுரிமை மீறப்படுவதாகவும் பரவலாக குற்றச்சாட்டுக்கள் எழுந்தன.
இந்த நிலையில், ஆரோக்கிய சேது செயலி மிகவும் பாதுகாப்பானது என்று மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை மந்திரி ரவிசங்கர் பிரசாத் விளக்கமளித்துள்ளார். பிடிஐ செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் ரவிசங்கர் பிரசாத் கூறும் போது, “ ஆரோக்கிய சேது செயலி இந்தியாவால் உருவாக்கப்பட்ட தொழில்நுட்ப கண்டுபிடிப்பாகும். கொரோனாவுக்கு எதிரான போருக்கு உதவும் பொறுப்பு மிக்க செயலியாக உள்ளது. இது மிகவும் வலுவான பாதுகாப்பு கட்டமைப்பை கொண்டதாகும். தனிநபர்களின் தரவுகளை பாதுகாப்பதில் மிகவும் சிறந்து” என்றார்.
Related Tags :
Next Story