புத்த பூர்ணிமா விழாவில் காணொலி காட்சி மூலம் பிரதமர் மோடி பங்கேற்பு


புத்த பூர்ணிமா விழாவில் காணொலி காட்சி மூலம் பிரதமர் மோடி பங்கேற்பு
x
தினத்தந்தி 7 May 2020 12:15 AM IST (Updated: 7 May 2020 12:15 AM IST)
t-max-icont-min-icon

இன்று நடைபெறும் புத்த பூர்ணிமா விழாவில் காணொலி காட்சி மூலம் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கிறார்.

புதுடெல்லி,

சித்ரா பவுர்ணமி தினத்தன்று, புத்தர் ஞானம் பெற்றார். இந்த தினம் புத்த பூர்ணிமா விழாவாக ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது. 

இந்நிலையில் உலகெங்கிலும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர், அதை எதிர்த்து போராடுவோரை கவுரவப்படுத்தும் விதமாக, புத்த பூர்ணிமா விழா இன்று (மே 7ம் தேதி) கொண்டாடப்படுகிறது. இதில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்க உள்ளார். இன்று காலை நடைபெறும் விழாவில், வீடியோ கான்பரன்சிங் மூலம் பங்கேற்கும் அவர் அதில் சிறப்புரையாற்றுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச பௌத்த கூட்டமைப்புடன் இணைந்து மத்திய கலாச்சார அமைச்சகம் உலகெங்கிலும் உள்ள பௌத்த சங்கங்களின் அனைத்து தலைவர்கள் பங்கேற்கும் இந்த வீடியோ கான்பரன்சிங் நிகழ்வை நடத்துகிறது.

இந்த நிகழ்ச்சி நேபாளத்தில் உள்ள புனித தோட்ட லும்பினி, இந்தியாவில் உள்ள மகாபோதி கோயில், புத்தகயா, முல்கந்தா குட்டி விஹாரா, சாரநாத், பரிநிர்வண ஸ்தூபம், குஷிநகர், புனித ப்ரதபத்தில் உள்ள ருவன்வேலி மகா சேயா, இலங்கையில் உள்ள பௌந்தநாத், சுயம்பு, நேபாளத்தில் நமோ ஸ்தூபம் மற்றும் பிற பிரபலமான பௌத்த தளங்களில் கொரோனாவை எதிர்த்து போராடும் முன்னணி பணியாளர்களுக்காக நடத்தப்படுகிறது.

இந்நிகழ்ச்சியில் கலாச்சார அமைச்சர் மற்றும் சுற்றுலாத்துறை மந்திரி பிரகலாத் சிங் படேல் மற்றும் விளையாட்டுத்துறை மந்திரி கிரண் ரிஜிஜு ஆகியோர் கலந்து கொள்வார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story