டெல்லியில் கொரோனா பாதிப்பால் எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் இருவர் பலி
டெல்லியில் கொரோனா பாதிப்பால் எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் இருவர் பலியாகியுள்ளனர்.
புதுடெல்லி,
டெல்லியில் கொரோனா பாதிப்பால் எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் 2 பேர் இன்று பலியாகினர். எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் 41 பேருக்கு இன்று ஒருநாளில் மட்டும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதன் மூலம், இதுவரை 193 எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர். கொரோனா பாதிப்பால் எல்லை பாதுகாப்பு படையில் ஏற்பட்ட முதல் உயிரிழப்பு இன்று ஏற்பட்டதுதான் ஆகும்.
Related Tags :
Next Story