விசாகப்பட்டினம் ரசாயண தொழிற்சாலையில் மீண்டும் விஷவாயு கசிவு


விசாகப்பட்டினம் ரசாயண தொழிற்சாலையில் மீண்டும் விஷவாயு கசிவு
x
தினத்தந்தி 8 May 2020 1:22 AM IST (Updated: 8 May 2020 1:22 AM IST)
t-max-icont-min-icon

விசாகப்பட்டினம் ரசாயண தொழிற்சாலையில் மீண்டும் விஷவாயு கசிவு ஏற்பட்டுள்ளதால் அதன் சுற்றுவட்டார பகுதியில் உள்ள மக்கள் தற்போது அங்கிருந்து வெளியேறி வருகின்றனர்.

விசாகப்பட்டினம்,

விசாகப்பட்டினம் கோபால்பட்டிணத்தில் உள்ள எல்.ஜி.பாலிமர்ஸ் ரசாயன ஆலையில் இன்று அதிகாலை ஸ்டைரீன் என்ற ரசாயன வாயு கசிவு ஏற்பட்டது. இதனால் இந்த ஆலையின் சுற்றுவட்டாரப்பகுதியில் 3 கிமீ தூரம் வரையுள்ள 5 கிராமங்கள் பாதிக்கப்பட்டன. 

இந்த சம்பவத்தில் ஒரு குழந்தை உட்பட 11 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 300க்கும் மேற்பட்டோர் மூச்சுத்திணறல் மற்றும் வாந்தி ஆகியவற்றினால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

சுமார் 1000 பேர் வரை இந்த வாயு தாக்கத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து தகவலறிந்ததும் உடனடியாக நிகழ்விடத்திற்கு விரைந்த  தேசியப் பேரிடர் குழுவினர் மீட்பு பணிகளில் ஈடுபட்டு மக்களை அப்பகுதியில் இருந்து வெளியேற்றினர். இந்தியாவை உலுக்கிய இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 1 கோடி ரூபாய் இழப்பீடு வழங்கப்படும் என ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி கூறியுள்ளார்.

இந்நிலையில் தற்போது அதே தொழிற்சாலையில் மீண்டும் விஷவாயு கசிவு ஏற்பட்டுள்ளது. இதனால் அந்த ஆலையின் சுற்றுவட்டார பகுதியில் 3 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள மக்கள் தற்போது  அங்கிருந்து வெளியேறி வருகின்றனர்.

Next Story