மும்பை அருகே ரெயில் மோதி 15 வெளிமாநில தொழிலாளர்கள் பலி?


மும்பை அருகே ரெயில் மோதி 15 வெளிமாநில தொழிலாளர்கள் பலி?
x
தினத்தந்தி 8 May 2020 8:19 AM IST (Updated: 8 May 2020 8:19 AM IST)
t-max-icont-min-icon

மும்பை அருகே ரெயில் மோதி 15 வெளிமாநில தொழிலாளர்கள் பலியானதாக முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கிறது.

மும்பை:

மராட்டிய மாநிலம் அவுரங்காபாத் மாவட்டத்தில்  அவுரங்காபாத்-நாந்தேட் ரெயில் பாதையில ரெயில் தண்டவாளத்தில் படுத்து இருந்த வெளிமாநில தொழிலாளர்கள் மீது காலியான சரக்கு ரெயில் மோதியது

இந்த விபத்தில் 15 பேர் உயிரிழந்துள்ளனர். இவர்கள் அனைவரும் ரெயில் பாதையில் மத்திய பிரதேசத்தை நோக்கி சென்று கொண்டு இருந்தனர். இரவில்  தண்டவாளத்தில் படுத்து தூங்கியதாக கூறப்படுகிறது. அதிகாலை அந்த பாதையில் ஓடிய சரக்கு ரெயில் அவர்கள் மீது மோதி உள்ளது

"அவுரங்காபாத்தின் கர்மத் அருகே ஒரு விபத்து நடந்தது. நிலைமையை உறுதிப்படுத்த ஆர்.பி.எஃப் மற்றும் உள்ளூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உள்ளன   தென் மத்திய ரயில்வேயின் தலைமை மக்கள் தொடர்பு அதிகாரி (சிபிஆர்ஓ) ) கூறினார்.


Next Story