மராட்டியத்தில் கொரோனா பாதிப்புக்கு பலி எண்ணிக்கை 694 ஆக உயர்வு
மராட்டியத்தில் கொரோனா பாதிப்புக்கு பலி எண்ணிக்கை 694 ஆக உயர்வடைந்து உள்ளது.
புனே,
இந்தியாவில் கொரோனா வைரஸ் தீவிர பாதிப்பு ஏற்படுத்தி வருகிறது. நாட்டில் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. எனினும், பாதிப்பு மற்றும் பலி எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. பொதுமக்கள் தங்களை காத்து கொள்ள ஊரடங்கு விதிகளை முறையாக கடைப்பிடிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.
நாட்டில் அதிக அளவாக மராட்டியத்தில் 17,974 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் 43 பேர் பலியான நிலையில், பலி எண்ணிக்கை 651ல் இருந்து 694 ஆக உயர்ந்து உள்ளது. 3 ஆயிரத்து 301 பேர் பாதிப்பில் இருந்து விடுபட்ட நிலையில் வீடு திரும்பி உள்ளனர்.
கோவாவில் பாதிப்பு உறுதி செய்யப்பட்ட 7 பேரும் சிகிச்சை முடிந்து சென்றுள்ளனர். இதனால் கொரோனாவில் இருந்து முழு அளவில் விடுபட்ட நிலையை கோவா அடைந்துள்ளது. இதனை தொடர்ந்து மணிப்பூர், அருணாசல பிரதேசம் மற்றும் அந்தமான் நிகோபார் தீவுகள் (33) ஆகியவையும் கொரோனா பாதிப்பில் இருந்து முழுவதும் விடுபட்டு உள்ளன. தமிழகத்தில் 5,409 பேர் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். 1,547 பேர் சிகிச்சை முடிந்து திரும்பி சென்றுள்ளனர். இதுவரை 40 பேர் பலியாகி உள்ளனர்.
Related Tags :
Next Story